எஸ்.மாரிமுத்து
டாக்டர் அப்துல் கலாம் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் புகழ்பெற்ற விஞ்ஞானியும் ஆவார். அவர் ஒரு விண்வெளி விஞ்ஞானியாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றினார் . அவர் 2015 ஜூலை 27ஆம் தேதி ஷில்லாங்கில் காலமானார். அவரது பொன்மொழிகள் அனைத்தும் மிகவும் உன்னதமானவையாகும். அவற்றில் சில இங்கே!
வாய்ப்புக்காக காத்திருக்காதே! வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்!
கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! அது உன்னைக் கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம்!
ஒருமுறை வந்தால் அது கனவு, இருமுறை வந்தால் அது ஆசை, பல முறை வந்தால் அது லட்சியம்!
துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு தோல்வியே இல்லை !கடின உழைப்பு, நேர்மைக்கு மாற்று எதுவும் இல்லை! நிச்சயம் எதுவும் இல்லை !
கனவு காணுங்கள், கனவு என்பது தூக்கத்தில் வருவது அல்ல! உங்களை தூங்கவிடாமல் எது செய்கிறதோ அதுதான் கனவு!
உலகம் உன்னை அறிவதற்கு முன், உன்னை உலகுக்கு அறிமுகம் செய்துக்கொள்!
வெற்றி பெற வேண்டும் என்ற பதட்டம் இல்லாமல் இருப்பது தான் வெற்றி பெற சிறந்த வழி!
நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால் அது உன் கை வந்து சேரும்!
தெரியாது என்பதை தைரியமாக ஒப்புக் கொள்ளுங்கள். அதே நேரம் தெரியாத அதை, தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்!
உங்களுக்குள் இறக்கைகள் உள்ளன: தவழ முயற்சிக்காதீர்கள்! பறக்க கற்றுக் கொள்ளுங்கள், உச்சத்திற்கு பறந்து செல்லுங்கள்!
அழகைப்பற்றி கனவு காணாதீர்கள். அது உங்கள் கடமையை பாழாக்கிவிடும்! கடமையை பற்றி கனவு காணுங்கள், அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும் !
இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது!
ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல உன்னை போல சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே!
கிளி வளர்த்தேன் பறந்து விட்டது : அணில் வளர்த்தேன் ஓடிவிட்டது ! மரம் வளர்த்தேன் இரண்டுமே திரும்பி வந்துவிட்டது!
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்!