சி.ஆர்.ஹரிஹரன்
இளம்பிரண்டையை நெய்யில் வதக்கி புளி, உப்பு, மிளகாய், கடுகு, பெருங்காயம், உளுந்து சேர்த்து சட்னியாக அரைத்து மாதம் இருமுறை நெய்யுடன் கலந்து சாப்பிட்டு வர வயிற்றுக்கிருமிகள் அனைத்தும் ஒழிந்து விடும்.
பப்பாளிப் பழத்தையும், மாம்பழத்தையும் சிறு துண்டுகளாக வெட்டி தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் மூலம் வராமல் தடுக்கலாம்.
பொன்னாங்கண்ணிக் கீரையை வேக வைத்து வெண்ணெய் சேர்த்து கடைந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும்.
கசகசாவை பாலில் அரைத்துக் குடித்து வந்தால் ஜலதோஷம் நீங்கி விடும்.
தினமும் காலையிலும், மாலையிலும் நான்கு பூண்டு பற்களை சாப்பிட்டு வந்தால் ரத்தக் கொதிப்பு கட்டுக்குள் இருக்கும்.
நாவல் பழத்தை எடுத்து அதனுடன் உப்பு கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் ஆறி விடும்.
வெங்காயத்தையும், கேரட்டையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நெஞ்சு வலி வராமல் இருக்கும்.
வயிற்றுக் கோளாறுகள் உள்ளவர்கள் புதினாத் துவையல் செய்து சாப்பிட்டு வருவது நல்லது.
சளித் தொல்லையா? வெள்ளைப் பூண்டு, வெற்றிலைக் காம்பு, வசம்பு, திப்பலி ஆகியவற்றை வெந்நீரில் அரைத்துக் குடித்தால் சளித்தொல்லை அறவே நீங்கி விடும்.
உடல் உறுப்புகளிலும், தசைப் பகுதிகளிலும் வலி ஏற்படும் போது ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை, பாலுடன் கலந்து சாப்பிட்டு வர பலன் நிச்சயம்.
சின்ன வெங்காயத்தை, பசு நெய்யில் வதக்கி அரைத்து பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறையும்.
சித்தரத்தையை எடுத்து இடித்துப் பொடி செய்து, அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர தொண்டைப் புண் ஆறும்.