எஸ்.மாரிமுத்து
சுதந்திரம் இல்லாத நாடு, காற்றில்லாத வீடு. – பாரதியார்
சுதந்திரமே வளர்ச்சிக்கு முதல் நிபந்தனை - சுவாமி விவேகானந்தர்.
சுதந்திரம் என்பது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை- ஜவஹர்லால் நேரு.
சுதந்திரம் இல்லாமல் ஒருவன் சந்தோஷமாக இருக்க முடியாது - டாக்டர். பி. ஆர். அம்பேத்கர்
சுதந்திரம் இல்லாவிட்டால் நாம் நமது திறமைகளை வெளிப்படுத்த முடியாது - பாரதியார்.
பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காத வரை ஒரு நாளும் செழிப்படைய முடியாது - ஜவஹர்லால் நேரு
மனிதன் பயமில்லாமல் வாழ வேண்டும், அதற்கு சுதந்திரம் தேவை - வினோபா பாவே
எவன் ஒருவன் தன் தற்காலிக நலனுக்காக சுதந்திரத்தை விட்டுக் கொடுக்கிறானோ, அவன் ஒருபோதும் சுதந்திரம் பெற தகுதியுடையவன் அல்ல! - பிராங்கிளின் .
சுதந்திரம் தானாக வரும் பரிசுப் பொருளல்ல... போரிட்டுப் பெற வேண்டிய செல்வம்! - ஜவஹர்லால் நேரு.
சுதந்திரத்திற்காகப் போராடும் லட்சியவாதிகள் அழியலாம், சுதந்திர வேட்கை அழியவே அழியாது - சுபாஷ் சந்திர போஸ்.
எங்கள் கனவு சுதந்திரம்... அதை அடைய நாங்கள் போராடுவோம்! நாங்கள் மரித்தாலும் எங்கள் சந்ததிகளும் அதை அடையும் வரை போராடுவார்கள் - சுபாஷ் சந்திர போஸ்.
நீங்கள் உங்கள் ரத்தத்தை கொடுங்கள், நான் உங்களுக்கு சுதந்திரம் பெற்று தருகிறேன் - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.
சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை - பால கங்காதர திலகர்.
சுதந்திரமாக இருப்பதற்கு எதிரிகளின் தோட்டாக்களை எதிர்கொள்வோம், எப்போதுமே சுதந்திரமாக இருப்போம் - சந்திரசேகர் ஆசாத் .
உண்மையான சுதந்திரம் என்பது சுயராஜ்யம். அது தன்னைத்தானே ஆள்வது - மகாத்மா காந்தி