பூனைகள் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!

தேனி மு.சுப்பிரமணி

உலகமெங்கும் ஆகஸ்ட் 8ஆம் நாளன்று பன்னாட்டுப் பூனைகள் நாள் (International Cat Day) கடைப்பிடிக்கப்படுகிறது.

Cat | Imge credit: Pinterest

பூனைகள் 10,000 ஆண்டுகளாக மனிதனால் பழக்கப்படுத்தப்படுவதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். முதன்முதலில் ஆப்ரிக்கர்களே பூனைகளைப் பழக்கப்படுத்தினர்.

Cat | Imge credit: Pinterest

பூனைகள் மனிதனிடம் தனது அன்பினை வெளிப்படுத்த வாலை ஆட்டி, உரசித்தெரியப்படுத்தும். தம்மை வளர்ப்போரின் அருகே வந்து படுத்துக்கொள்வதும் உண்டு.

Cat | Imge credit: Pinterest

பூனைகள் பொதுவாக 2.5 லிருந்து 7 கிலோகிராம் வரை எடை கொண்டவையாக இருக்கின்றன.

Cat | Imge credit: Pinterest

பூனைகள், ஒரு உணவை மூன்று முறை ருசித்துச் சோதனை பார்த்தபின் நான்காவது முறைதான் நம்பிக்கையுடன் அதனை உண்ணும்.

Cat | Imge credit: Pinterest

பூனைகளால் கடல் நீரை குடிக்க முடியும். அதன்  சிறுநீரகங்கள் உப்பை வடிகட்டும் அளவிற்குத் திறன் கொண்டவை.

Cat | Imge credit: Pinterest

பூனைகள் இருமாதங்கள் வரை தமது குட்டிகளைச் சுமக்கும். ஒரு பூனை தமது வாழ்நாளில்  150 குட்டிகள் வரை ஈனும்.

Cat | Imge credit: Pinterest

பூனையின் சராசரி ஆயுட்காலம் 9.4 ஆண்டுகளிலிருந்து தற்போது 15 ஆண்டுகளாக அதிகரித்திருக்கிறது.

Cat | Imge credit: Pinterest

பூனைகளால் தங்களின் காதுகளைத் தனித்தனியாகக் கட்டுப்படுத்த முடியும். பூனை காதுகளை 180 டிகிரிக்கு நகர்த்தவும் முடியும்.

Cat | Imge credit: Pinterest

பூனைகளால் 100-க்கும் மேற்பட்ட வெவ்வேறு ஒலிகளை உருவாக்க முடியும்.

Cat | Imge credit: Pinterest

பூனைகள் ஆறுமடங்கு உயரத்தில் இருந்து குதிக்கும் திறனுடையவை.

Cat | Imge credit: Pinterest

பூனைகள் மியாவ் என்று குறிப்பிடுவது, மனிதர்களுடன் தொடர்பு கொள்வதற்கு மட்டுமே. தங்களின் சக பூனைகளோடு மியாவ் சத்தம் அரிதாகவே எழுப்புகின்றனவாம். மாறாக, அவை உடல் மொழி, வாசனை போன்றவற்றை வைத்தே ஒன்றுடன் ஒன்றை தொடர்பை ஏற்படுத்துகின்றன.

Cat | Imge credit: Pinterest

பூனைகளைப் பொறுத்தவரை தங்களைச் சுத்தம் செய்து கொள்வதில் மிகுந்த கவனமாக இருக்கும். இதனாலேயே தன்னை நாக்குகளால் நக்கிச் சுத்தம் செய்து கொள்கின்றன.

Cat | Imge credit: Pinterest

பூனைகள் தங்கள் பாதங்கள் வழியாக வியர்வையை வெளியேற்றுகின்றன.

Cat | Imge credit: Pinterest

பூனைகளின் உடல்தசைகள் மிகவும் நெகிழ்வுத்தன்மை மிக்கது. ரப்பரை போல வளையும் திறன் பூனைகளுக்கு உண்டு. எனவே, எத்தனை மாடி உயரத்தில் இருந்து விழுந்தாலும் பூனைகள் அடிபடாமல் உயிர் பிழைத்துக்கொள்ளும்.

Cat | Imge credit: Pinterest

பூனைகள் தங்களின் வாழ்நாளில் 70% தூங்கிக் கொண்டுதான் இருக்கும்.

Cat | Imge credit: Pinterest

பூனைகளின் நுகரும்புலன், மனிதனைவிட 14 மடங்கு அதிகம். பூனைகளின் நாக்கில் இனிப்புச் சுவையை அறியும் நுகர்மொட்டுகள் இல்லாததால், பூனைகளால் இனிப்புச்சுவையை அறிய இயலாது.

Cat | Imge credit: Pinterest
Friendship quotes | Imge credit: Pinterest
நட்பின் ஆழத்தை உணர்த்துகின்ற 10 புது பொன்மொழிகள்..!