அகிலா சிவராமன்
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் கர்ம வீரருமான திரு. காமராஜர் அவர்கள்தான் முதன்முதலில் தமிழகத்தில் படிக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராஜர் அவர்களின் பொன்மொழிகள் எக்காலத்திற்கும் ஏற்றவைகளாக திகழ்கின்றன. அவை காலத்தால் அழியாத சொத்தாகும். அவருடைய மிகச்சிறந்த 10 பொன்மொழிகளை இப்பதிவில் பார்க்கலாம்.
உன் பிள்ளை ஊனமாய் பிறந்தால் சொத்து சேர்த்து வை. சொத்து சேர்த்து பிள்ளையை ஊனமாக்காதே.
நேற்று இன்று நாளை..! முக்காலத்தையும் உணர வேண்டும். நாம் உணர்ந்தால் மட்டும் போதாது வாலிப வயதினருக்கும் உணர்த்த வேண்டும்.
கஷ்டத்தை அனுபவிக்காமல் எந்தவொரு மனிதரும் அவரது இலட்சியத்தை அடைய முடியாது .
ஒரு பெண்ணுக்கு கல்வி புகட்டுவது ஒரு குடும்பத்திற்கே கல்வி தருவதாகும்.
நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்காதவன் பிணத்திற்கு சமமாவான்.
நேரம் தவறாமை என்ற கருவியை உபயோகிப்பவர் என்றும் கதாநாயகர்தான்.
பிறர் உழைப்பை தன் சுயநலத்திற்கு பயன்படுத்துவதே உலகின் மிகப்பெரிய கேவலமான செயலாகும்.
பணம் இருந்தால் தான் நாலு பேர் மதிப்பார்கள் என்றால் அந்த மரியாதை எனக்கு தேவையில்லை.
எல்லாம் போய்விட்டாலும் வெல்லமுடியாத உள்ளம் இருந்தால் உலகத்தையே கைப்பற்றலாம்.
எல்லா மக்களிடமும் குறைபாடுகள் மட்டுமல்ல ஏதேனும் சிறப்பு சக்திகள் இருக்கத்தான் செய்யும்.
காலத்தால் அழியாத அவருடைய பொன்மொழிகளை நாம் படித்து அதன்படி நடந்து கொள்வோமாக!!!!