எஸ்.மாரிமுத்து
அறிஞர்கள் பார்வையில் பெண்களின் சிறப்பை போற்றும் பெண்கள் பற்றிய பொன் மொழிகள்.
மங்கையராக பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.
பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காத வரை ஒரு நாடும் செழிப்படையாது - ஜவஹர்லால் நேரு
ஒரு விஷயத்தை சொல்லி முடிக்க ஆண்களை கேளுங்கள். செய்து முடிக்க பெண்களை கேளுங்கள் - மார்கரெட் தாட்சர்.
வாழ்க்கை என்ற ஆற்றையோ, கடலையோ கடப்பதற்கு பெண் என்ற படகோ, கப்பலோ அவசியம் தேவை - காண்டேகர்.
ஒரு பெண்ணை படிக்க வைப்பது ஒரு குடும்பத்தையோ படிக்க வைப்பதற்கு நிகரானது. - டிக்கன்ஸ்.
சகிப்புத் தன்மையில் வலிமை மிகுந்தவள் பெண் - காந்தியடிகள்.
தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே பெண்களுக்கு அழகு - ஒளவையார்.
பெண்களின் கண்ணீர் உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி - வில்சன் மிசுனர் .
பெண்கள் ஆண்களை விட சிறந்தவளா என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் கண்டிப்பாக தாழ்ந்தவள் இல்லை - கோல்டா மியர்.
ஆண்களின் தர்க்கமெல்லாம் பெண்களின் ஒரு உணர்வுக்கு இணையாகாது - வால்டேர்.
அன்பு செய்யும் பெண்ணின் நெஞ்சம் எப்போதும் இளமை உடையது - டேவிட் ஹ்யூம்.
பெண் மனம் அறிவு பெறுவதைப் பொறுத்தே மனித சமுதாயம் அறிவும் வளர்ச்சியும் பெறுகிறது. - பெரியார் ஈ.வே.ராமசாமி
பெண்களுக்கு கல்வி கொடுப்பதன் மூலம், ஒரு தலைமுறையையே சீர்திருத்த முடியும் - விவேகானந்தர்
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் - பாரதியார்.
பெண்கள் தங்களின் சொந்த இருப்பை வரையறுக்க வேண்டும், மற்றவர்களின் வரையறைகளுக்கு அடிபணியக்கூடாது. - சிமோன் டி பொவ்வார்