வாசுதேவன்
இந்த விளையாட்டு 1915 ல் அறிமுகப்படுத்தப்பட்டதாக கருதப்படுகின்றது.
முதலில் ஒரு அணிக்கு ஆறு நபர்கள் விளையாடினார்கள். தற்பொழுது பங்கு கொள்வது அணிக்கு இரண்டு நபர்கள் மட்டுமே.
கடற்கரை மணலில் விளையாடுவதால் இந்த ஆட்டத்திற்கு பெயர் 'பீச் வாலிபால்' என்று பெயர்.
கோர்டின் உள்ளே அதிக பட்சமாக, மூன்று முறை பந்தை தொடலாம், எதிரணியினருக்கு பந்தை அனுப்பும் முன்.
வாலி பால் ஆட்டம் மாதிரி விளையாடப்படும். பந்தை கேட்ச் பிடிக்கவோ, தூக்கி எரியவோ அனுமதி இல்லை.
விரல் நுனிகளால் பந்தை மேலே அனுப்ப வேண்டும்.
7 புள்ளிகள் அடைந்ததும், அணிகள் கோர்ட்டின் பக்கங்கள் மாற்றிக்கொண்டு ஆடுவார்கள்.
கடற்கரை மண்ணில் ஆடுவதால் , பீச் வாலிபால் விளையாட்டில் ஆடுபவர் எகிறி குதித்து பந்தை தட்டி ஆடுவது என்பது அவ்வளவு சுலபமில்லை.
கோர்ட்டின் அளவு சிறியதாக இருப்பதால் இந்த ஆட்டத்தில் ஒரு அணிக்கு இரண்டு நபர்கள் மட்டுமே.
பீச் வாலி பால் கோர்ட் செவ்வக வடிவில் இருக்கும். 16 x 8 மீட்டர்கள் அளவில்.
நெட் தரையிலிருந்து ஆடவர் ஆடும் களத்தில் 2.43 மீட்டர் உயரத்தில் இருக்கும். மகளிருக்கு 2.24 மீட்டர் உயரத்தில் இருக்கும்.
ஆட்டதின் நடுவில் ஆடுபவரில் யாருக்காவது காயம் ஏற்பட்டால், ஆட்டம் முடிவிற்கு வந்ததாக கருதப்படும்.
வாலிபால் ஆட்டத்தின் பந்துக்களை விட பீச் வாலி பால் பந்துக்கள் சிறிது பெரிதாகவும், எடையில் குறைவாகவும் இருக்கும்.
1996 ல் இருந்து சம்மர் ஒலிம்பிக்சில் இந்த ஆட்டமும் பங்கு பெருகின்றது.