RCB 'ராஜா'வை முந்திய 'ராணி'!

நான்சி மலர்

2026-ஆம் ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி சாம்பியன் பட்டம் வென்றது வரலாற்றுச் சாதனையாக அமைந்தது. இந்தத் தொடரின் வீராங்கனைகளின் வாழ்வில் நடந்த சில சுவாரசியமான கதைகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

Women Premier League 2026

ஸ்மிருதி மந்தனாவின் வெற்றி, மைதானத்துடன் முடிந்துவிடவில்லை. இசை அமைப்பாளர் பலாஷ் முச்சலுடனான திருமணம் நிச்சயிக்கப்பட்டு ரத்தானது. இந்த மன அழுத்தமான சூழலிலும், அவர் காட்டிய மன உறுதி அனைவரையும் வியக்க வைத்தது.

Smriti mandhana victory

மந்தனா இந்த முறை அணியினரை "விராட் கோலி பாணியில்" வழிநடத்தினார். உடற்தகுதி, ஜிம் பயிற்சியில் அதிக கவனம் செலுத்தினார். இதுவே 200 ரன்களுக்கு மேல் சேஸ் செய்ய அவர்களுக்கு பலத்தைத் தந்தது.

Virat kohli style

ஸ்ரேயங்கா பாட்டில் மந்தனாவைப் பற்றிப் பேசும்போது, "கடந்த ஒன்றரை மாதங்களாக ஸ்மிருதி அக்கா பல கஷ்டங்களைச் சந்தித்தார். இருப்பினும் எங்களைச் சரியாக வழிநடத்தினார். எனவே, இந்த வெற்றியை நான் அவருக்குத்தான் அர்ப்பணிக்கிறேன்," என்று கூறினார்.

Shreyanka patil about Smriti

ஜார்ஜியா வோல் பற்றி மந்தனா பேசும்போது, "வோல் விளையாடிய விதம் எங்களை ஆரம்பத்திலேயே ஆட்டத்திற்குள் கொண்டு வந்தது. ஒரு இளம் வீராங்கனை இவ்வளவு தைரியமாக ஆடுவது சிறப்பு," என்றார்.

Smriti about Georgia voll

ஆர்சிபி மகளிர் அணியின் வெற்றியை அனுஷ்கா சர்மா தனது சமூக வலைதளத்தில் "வரலாறு மீண்டும் திரும்பியது (History Repeated)" என்று பாராட்டிப் பதிவிட்டுள்ளார்.

Anushka sharma about RCB Victory

இறுதிப் போட்டியில் வின்னிங் ஷாட் அடித்த ராதா யாதவ் கூறுகையில், "கடைசி ஓவரில் ரன்கள் தேவைப்பட்டபோது பதற்றம் இருந்தது. ஆனால், மந்தனா அக்கா என்னிடம் வந்து 'உன்னால் முடியும்' என்று நம்பிக்கை கொடுத்தார்."

Radha yadav about Smriti

ஆர்சிபி-யின் தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற மலோலன் ரங்கராஜன் முதல் ஆண்டிலேயே கோப்பை வென்றது அவரது வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமைந்தது.

Malolan Rangarajan

"Ee Sala Cup Namade" அதாவது "இந்த வருடம் கோப்பை நமதே!" என்ற முழக்கம் நிஜமானதை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

EE SALA CUP NAMDE

ஆட்டம் முடிந்ததும் டெல்லி கேப்டன் ஜெமிமா, மந்தனாவை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறிய புகைப்படம், "உண்மையான ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்" என ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டது.

Jemimah rodrigues and mandhana

ஆர்சிபி பிரான்சைஸ் கடந்த 3 ஆண்டுகளில் 3 கோப்பைகளை (WPL 2024, IPL 2025, WPL 2026) வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Three trophies

WPL வரலாற்றிலேயே மிகப்பெரிய ரன் சேஸ் இந்த ஆண்டின் இறுதிப் போட்டியில் நிகழ்ந்தது. 204 ரன்கள் என்ற இமாலய இலக்கை ஆர்சிபி அணி வெற்றிகரமாக எட்டியது.

Best run chase in WPL History
Top 10 places in earth that look like other planet
நிஜமாகவே இது நம்ம பூமிதானா? வேறொரு கிரகத்திற்கு சென்ற உணர்வைத் தரும் டாப் 10 இடங்கள்!