நான்சி மலர்
நமது சமையலறையில் ஆரோக்கியமானது என்று நினைத்து நாம் பயன்படுத்தும் சில பொருட்கள் புற்றுநோயை (Cancer) உண்டாக்கும் காரணிகளாக மாற வாய்ப்புள்ளது (10 Dangerous Things In Kitchen).
1/10. நான்-ஸ்டிக் பாத்திரங்களில் கீறல்கள் விழும்போது, அதன் மேல் பூசப்பட்டுள்ள Teflon (PTFE) நாம் சமைக்கும் உணவில் கலக்கின்றன. இதனால் உடலுக்குப் பாதிப்புகள் ஏற்படும்.
2/10. பிளாஸ்டிக் டப்பாக்களில் சூடான உணவை வைப்பது மிகவும் ஆபத்தானது. இதனால் பிளாஸ்டிக்கில் உள்ள BPA (Bisphenol A) மற்றும் Phthalates போன்ற ஆபத்தான இரசாயனங்கள் உணவில் கசிந்து, புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும்.
3/10. எண்ணெயை பலமுறை கொதிக்க வைக்கும் போது, அதில் Acrolein மற்றும் Polycyclic Aromatic Hydrocarbons (PAHs) போன்ற புற்றுநோய் உண்டாக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த மூலக்கூறுகள் உருவாகின்றன.
4/10. வெள்ளைச் சர்க்கரை தயாரிக்கப்படும் போது பல்வேறு இரசாயனங்கள் கொண்டு வெளுக்கப்படுக்கிறது. அதிகப்படியான சர்க்கரை உடலில் இன்சுலின் அளவை அதிகரித்து, புற்றுநோய் செல்கள் எளிதாக வளர்வதற்கான சூழலை உருவாக்குகிறது.
5/10. சூடான உணவுகளை அலுமினியம் ஃபாயில் பேப்பரில் சுற்றி வைக்கும் போது, அலுமினியம் உலோகம் உணவோடு மிக எளிதாகக் கலந்துவிடுகிறது. இது உடலுக்குள் சென்று செல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
6/10. டின்னில் அடைக்கப்பட்ட உணவுகள் கெட்டுப்போகாமல் இருக்க சேர்க்கப்படும் பிரசர்வேட்டிவ்கள் மற்றும் டின்னின் உள்பகுதியில் பூசப்படும் பிளாஸ்டிக் லைனிங் ஆகியவை உடலுக்கு கேடு விளைவிப்பவை.
7/10. இறைச்சி, மீன் அல்லது காய்கறிகளை நேரடியாக நெருப்பில் காட்டி சமைக்கும் போது அதில் Heterocyclic Amines (HCAs) என்ற வேதிப்பொருள் உருவாகிறது. இது செல்களின் DNA-வை பாதிக்கக்கூடியது.
8/10. மசாலாப் பொடிகள் நல்ல நிறமாகத் தெரிவதற்காகச் சேர்க்கப்படும் செயற்கை நிறமிகள் மற்றும் சுவையூட்டிகள் கல்லீரல் மற்றும் குடல் புற்றுநோய்க்கு வழிவகுக்கலாம்.
9/10. பாத்திரங்களை கழுவப் பயன்படுத்தும் லிக்விடில் உள்ள Triclosan சரியாகக் கழுவப்படாவிட்டால், பாத்திரங்களிலேயே தங்கிவிடும். அடுத்த முறை அதில் சமைத்து சாப்பிடும்போது அது நம் வயிற்றுக்குள் சென்று தீங்கிழைக்கும்.
10/10. இட்லி தட்டில் துணிக்கு பதிலாக பிளாஸ்டிக் தாள்களை வைத்து நீராவியில் வேக வைக்கும் பழக்கம் பரவி வருகிறது. அதிக வெப்பமடையும் போது பிளாஸ்டிக்கில் உள்ள கார்சினோஜென்கள் இட்லியோடு கலந்து உடலுக்குள் சென்று தீங்கிழைக்கும்.