சி.ஆர்.ஹரிஹரன்
இளவயதில் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.
தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடித்து வந்தால் உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்கு தீர்வாக இருக்கும்.
கர்பிணிப் பெண்கள் காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும்.
முட்டைக்கோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிக அளவில் உள்ளதினால் மார்பக புற்றுநோய் வராமல் இருக்க உணவில் அடிக்கடி முட்டைக்கோஸ் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.
ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால் தோலோடு ஆப்பிளை சாப்பிடுங்கள். பெக்டின் நமது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி விடும்.
குழந்தை பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள் தான் எலும்பை உறுதிப்படுத்தும்.
நீங்கள் தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் எடுத்துக்கொள்பவர் என்றால் ஆரோக்கியமும், அழகும் எப்போதும் உங்கள் பக்கம்தான்.
சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நாக்குப் பூச்சித்தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை அறவே நீங்கிவிடும்.