நான்சி மலர்
அன்னாசி பழத்துண்டுகளுடன் சிறிது மிளகாய்த்தூள் தூவி சாப்பிட்டால், உணவு நன்றாக ஜீரணம் ஆவதுடன் உடலில் உள்ள மெட்டபாலிசம் அதிகரிக்கும்.
இளநீருடன் சிறிது சோம்பு (Fennel seeds) சேர்த்து குடிப்பது உடல் சூட்டை தணிப்பதோடு உணவு நன்றாக ஜீரணம் ஆவதற்கு உதவும்.
மாம்பழத் துண்டுகளில் கருப்பு உப்பு தூவி சாப்பிடுவதால், வயிற்றில் ஏற்படும் அசிடிட்டியைக் குறைக்கும். மேலும் சுவையை அதிகரிக்கும்
தர்பூசணி பழத்துண்டுகளில் சிறிது உப்பை தூவி சாப்பிடுவது உடலில் நீரேற்றத்தை அதிகரிக்க உதவும். மேலும் வயிறு நிறைந்த உணர்வைத் தரும்.
நன்றாக பழுத்த வாழைப்பழ துண்டுகளுடன் மிளகுத்தூளை சேர்த்து சப்பிடுவதால், வயிறு வீக்கம் அல்லது வயிறு உப்புசம் பிரச்னைகள் தீரும்.
இதயத்தில் கொழுப்பு சேராமல் இருக்கவும், உடலில் உள்ள அதிகமான கொழுப்பை கட்டுப்பாட்டுடன் வைக்கவும் பலாப்பழம் சாப்பிட வேண்டும்.
நாவல்பழ விதையை உலர வைத்து பொடி செய்து தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் சிறுநீரகத்தில் உருவான கற்கள் கரையும்.
பச்சை ஆப்பிளில் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. தினமும் பச்சை ஆப்பிள் ஒன்று சாப்பிடுவது, செரிமானத்தை மேம்படுத்தி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
கிவி பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து கர்ப்பக்காலத்தில் தாய் மற்றும் குழந்தையை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
பேரிக்காயை தோலுடன் சாப்பிடுவது இதய நோய்களை கட்டுப்படுத்த உதவும். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் டைப் 2 சர்க்கரை நோய் அபாயத்தை குறைக்கிறது.