நான்சி மலர்
1/11. கோடைகாலத்தில் உங்கள் கண்களை குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க 10 எளிய டிப்ஸ்.
2/11. குளிர்ந்த வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களின் மேல் 10-15 நிமிடங்கள் வைத்திருப்பது உடனடி குளிர்ச்சியைத் தரும்.
3/11. சுத்தமான பஞ்சை ரோஸ் வாட்டரில் நனைத்து கண்களின் மேல் வைத்து வர, கண்களின் எரிச்சல் குறையும்.
4/11. ஒரு நாளைக்கு 4 முதல் 5 முறை சுத்தமான குளிர்ந்த நீரால் கண்களைக் கழுவுங்கள்.
5/11. புதிய கற்றாழை ஜெல்லியை கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் தடவினால் சூடு தணியும். கண்களுக்குள் படாமல் கவனமாக இருக்கவும்.
6/11. வெளியே செல்லும்போது UV கதிர்களிடமிருந்து பாதுகாக்க தரமான சூரியக் கண்ணாடி அணிவது அவசியம்.
7/11. உருளைக்கிழங்கைத் துருவி அதன் சாற்றில் பஞ்சை நனைத்து கண்களில் வைத்தால் கருவளையம் குறைவதோடு கண்களும் குளிரும்.
8/11. இரவு 7-8 மணி நேர ஆழ்ந்த தூக்கம் கண்களுக்குத் தேவையான ஓய்வைத் தந்து சூட்டைத் தணிக்கும்.
9/11. மொபைல் மற்றும் லேப்டாப் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளவும். 20-20-20 விதியைப் பின்பற்றுங்கள். ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் 20 அடி தூரத்தில் உள்ள பொருளை 20 விநாடிகள் பார்க்கவும்.
10/11. வைட்டமின் A நிறைந்த உணவுகளை உட்கொள்வது கண்களின் ஆரோக்கியத்திற்குப் பலம் சேர்க்கும்.
11/11. காய்ச்சாத குளிர்ந்த பாலில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைப்பது சிறந்த பலனைத் தரும்.