கர்ப்பிணிப் பெண்கள் கவனத்திற்கு..!

கோவீ.ராஜேந்திரன்

குழந்தை கருவுறும் நாள் தொடங்கி குழந்தை பிறந்து இரண்டு வயது ஆகும் வரை, அதாவது சுமார் 1000 நாட்களுக்கு கர்ப்பிணிப் பெண்கள் உட்கொள்ளும் சத்தான உணவுதான் குழந்தையின் உடல், மூளை வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றைத் தீர்மானிக்கின்றன.

Pregnant Women healthy Diet

கர்ப்பிணிப் பெண்கள் ஒரு நாளைக்குக் கொஞ்சம் கொஞ்சமாக 5 முறை சாப்பிடுங்கள். தினமும் 600 மில்லி பால், ஒன்று அல்லது இரண்டு முட்டை, பிடித்தமான கொட்டைகள், பருப்புகள், வாரம் ஒருமுறை மீன் அல்லது ஆட்டிறைச்சி சாப்பிடுங்கள்.

Pregnant Women healthy Diet

வாரம் இருமுறையாவது வாழைத்தண்டு, கருணைக் கிழங்கு, பிஞ்சு முருங்கைக்காய் சமைத்து சாப்பிட்டால் உயிரணுக்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும்.

Pregnant Women healthy Diet in vegetables

கேரட், தக்காளி இரண்டையும் பச்சையாக தலா இரண்டு தினங்கள் சாப்பிட்டால் குழந்தையின் சருமம் நல்ல நிறம் பெறும். தோற்றப் பொலிவு கூடும்.

Pregnant Women healthy Diet in tomato and Carrot

கர்ப்பிணிகள் சாப்பாட்டில் அதிக அளவில் உப்பு சேர்க்கக்கூடாது. கீரைகளை விரும்பி சாப்பிட வேண்டும். நொறுக்குத் தீனிகளை வெறுக்கவேண்டும்.

Pregnant Women should care on salt

குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 2 முதல் 3லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போதுதான் பனிக்குடம் ஆரோக்கியமாக இருக்கும். குழந்தையும் ஆரோக்கியமாக வளரும்.

Pregnant Women should drink more water

அரிசி, கோதுமையோடு கம்பு, சோளம், ராகி, வேர்க்கடலை என்று அனைத்து தானியங்களையும் சாப்பிட வேண்டும். அதுதான் உடல் பலத்தைத் தரும்.

Pregnant Women should take cereals

மாதுளை அடிக்கடி சாப்பிட்டால் வாந்தி பிரச்னை குறையும்.

Pregnant Women should take pomegranate

கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல…உணர்ச்சிவசப்படுவதாலும் உடலைப்பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது.

Pregnant Women should take banana

கர்ப்பிணிப் பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.

Pregnant Women should take eraly breakfast

வயிற்றில் குழந்தை வளரவளர, குடல் ஒருபக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிடலாம்.

Pregnant Women should take juice

கர்ப்ப காலத்தில் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த சாதாரண உப்புக்குப் பதிலாக கல் உப்பை உட்கொள்ளலாம். கல் உப்பில் ரத்த அழுத்தத்தை குறைக்கும் பொட்டாசியம் உள்ளது.

diet on stone salt

ஆட்டுக்கறி, கோழிக்கறி, மற்றும் இதர அசைவ உணவுகள், முட்டை&பால் பொருட்கள் ஆகிய உணவுகளை நன்றாக வேக வைத்து சாப்பிட வேண்டும். பாதி வேக்காட்டில் சமைக்கப்பட்ட உணவுகள் கருவின் வளர்ச்சியைப் பாதிப்படையச் செய்கிறது.

pregnant women diet milk

குழந்தை பெற்ற பெண்கள் சைவமாக இருப்பவர்கள் முருங்கைக் கீரையையும், அசைவமாக இருப்பவர்கள் மீனையும் உணவில் சேர்த்துக்கொண்டால் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

pregnant women diet

தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்கும்போதுகூட முதலில் ஒரு தம்ளர் நீர் குடித்தப்பிறகு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இதனால் தாய்ப்பால் சுரப்பு வேகம் கூடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

pregnant women diet

பிரசவத்துக்கு பிறகு உடல் எடை குறையவும், கட்டுகள் வைக்கவும், எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை, தேன், சீரகம், மிளகுத்தூள், புதினா, கறிவேப்பிலை சேர்த்த பானம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் என்பதோடு இவை உடலில் இருக்கும் கொழுப்பைக் கரைத்தும் வெளியேற்றும்.

pregnant women diet
group of peoples