தூய சந்தனத்தை நெல்லிக்காய் சாறுடன் சேர்த்து அருந்த, என்ன ஆகும் தெரியுமா?

மகாலெட்சுமி சுப்ரமணியன்

மர வகைகளில் விலை உயர்ந்தது சந்தன மரம்‌. இவை இலைகள் மூலம் குளிர்ச்சியை வெளியிடுபவை. இதன் காரணமாக சந்தன மரங்கள் வளரும் இடங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டு மண் குளிரும்.

Sandalwood tree

சந்தன மரத்தில் அதிகம் பயன் தருபவை அதன் மரக் கட்டைகள்தான். சந்தன விதைகள் மருத்துவத்தில் பயன்படுகின்றன.

Sandalwood tree seeds | Img Credit: Indiamart

வெள்ளை சந்தன மரக் கட்டைகள் சரும பராமரிப்பு மற்றும் உடல் உள்ளுறுப்புகளின் சீரான இயக்கத்திற்குத் துணை புரிகின்றன.

White sandalwood | Img Credit: Satvikstore

அரோமாதெரபியில் சந்தன எண்ணெய் மன அமைதிக்கும், மன அழுத்தப் பாதிப்புகளைப் போக்கவும், உடல் சரும வியாதிகளைப் போக்கவும் பயன்படுகிறது.  

Sandalwood oil | Img Credit: Purodem

சந்தனம் உடல் சூட்டைத் தணிக்கும். கருத்த சருமத்தைப் பொலிவாக்கும். சருமத்திற்கு இறுக்கத்தைத் தரும்.

smooth body skin | Img Credit: Freepik

சந்தனத்தை அரைத்து தலையில் வேர்க்காலில் தடவ, தலையில் கோடைக்காலத்தில் ஏற்படும் கொப்புளங்கள் மறையும். தலைவலி காணாமல் போகும்.  ‌

Sandalwood Paste | Img Credit: Alumni

தூய சந்தனத்தை நீரில் கலந்து குடிக்க ரத்தம் தூய்மையாகி உடலைக் குளிர்விக்கும். மனதை உற்சாகப்படுத்தி,  சுறுசுறுப்பாக இயங்கவைக்கும்.

Sandalwood | Img Credit: Coco Soul

சந்தனத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து அரிப்பு, தேமல், வீக்கம் உள்ள இடத்தில் தடவ அவை குணமாவதோடு சகல சரும வியாதிகளையும் போக்கும்.

Skin rashes | Imf Credit: Dr garg

சந்தனத்தூளைத் தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து ஆறியதும் பருகி வர சிறுநீர் எரிச்சல் குணமாகும். சூட்டினால் ஏற்படும் கண் கட்டி மறையும்.

Sandalwood | Img Credit: KSTDC

நீரிழிவு நோயாளிகள் நெல்லிக்காய் சாறுடன் சிறிதளவு சந்தனத்தைச் சேர்த்து தினமும் தொடர்ந்து அருந்திவர நீரிழிவு பிரச்னைகளைத் தீர்க்கும். இதய படபடப்பு, ஜீரணம், உடல் மந்தம், அனைத்தையும் குணமாக்கும்.

Gooseberry and sandalwood Juice | Img Credit: Forest Essentials

சந்தனத்தை மருதாணி விதைகளோடு கலந்து தூபம் போட, வீடுகளில் நறுமண காற்று வீசுவதுடன் மனம் தெளிவாகும்.

Thoobam

சந்தன எண்ணெய் உடல் நலனுக்கு ஏற்றது. இதை பக்கவாதம், முடக்கு வாதம் போன்ற வாத நோய்களுக்கு வெளிப்பூச்சு எண்ணையாகவும், உள் மருந்தாகவும் கொடுக்கலாம்.

Stroke

மொட்டை அடித்தவுடன் தலையில் தூய சந்தனத்தைத் தடவ உடல்சூடு தணிந்து குளிர்ச்சியைத் கொடுக்கும்.‌

Sandalwood | Img Credit: DPC

முக அழகிற்கும் சந்தானத்தின் பயன்பாடுகள் அதிகம் உள்ளது. தூய சந்தனம் மேனி எழிலை அதிகரிக்கும். 

Sandalwood | Img Credit: Herzindagi
Indoor Plants | Img Credit: Martha stewart
குளு குளு வீட்டிற்கு இந்த ‘இன்டோர் பிளான்ட்ஸ்’ பெஸ்ட்!