காய்கறிகள் வேக வைத்த நீரில் இவ்வளவு நன்மைகளா!

பி.மஹதி

காய்கறிகளை வேக வைத்த நீரை நாம் வடிகட்டி, தூக்கி எறிந்து விடுகிறோம். ஆனால் உண்மையில் காய்கறிகளை விட அதிக சத்து, இந்த நீரில்தான் உள்ளது என்பதை நாம் உணர்வதில்லை.

Vegetables | Img Credit: Thyme & envy

எலுமிச்சை வேக வைத்த நீரைக் குடிப்பது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது. இதில் கால்சியம் மற்றும் பொட்டாசியம் உள்ளதால், இது உயர் இரத்த அழுத்தத்தை சாதாரண நிலைக்கு கொண்டு வர உதவுகிறது.

Blood pressure | Img Credit: Wikipedia

பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.

Dandruff | Img Credit: Rupa health

சௌ சௌ வேக வைத்த நீரில் உப்பு, மிளகு சேர்த்து சூப் போல தினமும் இரு வேளை பருகி வர வயிற்றுக் கொழுப்புகள் கரைந்து உடல் நலமாகும்.

Fat

பீன்ஸ் வேக வைத்த நீரை பருகி வந்தால் வாய் புண், குடல் புண் ஆறும். நீண்ட நாள் ஆறாத புண்களை பீன்ஸ் வேக வைத்த நீரால் கழுவி வந்தால் விரைவில் ஆறும்.

Mouth sore

கொத்தவரங்காய் வேக வைத்த நீரைக் குடிப்பது உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கவும், உடலில் உள்ள அதிகப்படியான உப்பு மற்றும் சர்க்கரையை சிறுநீர் மூலம் வெளியேற்றவும் உதவுகிறது.

Sugar

முள்ளங்கியை வேக வைத்து அந்த நீரை வடிகட்டிக் குடித்து வர சிறுநீரக கற்கள் முற்றிலும் கரைந்து விடும். மேலும், ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியயேற்றும்.

Kidney stone

பெண்கள் தினமும் காலையில் பூண்டு வேக வைத்த தண்ணீரை உட்கொண்டால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.

Periods

முட்டைகோஸ் வேக வைத்த தண்ணீரை குடித்து வந்தால், கண் புரை என்று அழைக்கப்படும் காட்ராக்ட் வராமல் தவிர்க்கலாம்.

Cataract | Img Credit: LEP&S
Paper Recycling
Earth Day: பேப்பர் மறுசுழற்சி பற்றிய சில சுவாரசிய உண்மைகள்!