இந்தக் கோடையில் கட்டாயம் பருக வேண்டிய 15 பானங்கள்!

A.N.ராகுல்

இந்தியாவின் சுட்டெரிக்கும் கோடையிலிருந்து தப்பிக்க, நம் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து, எலக்ட்ரோலைட்டுகள் (electrolytes) கொண்ட சில ஆரோக்கிய பானங்கள் என்னவென்று பார்ப்போம்.

Summer Drinks

1. தர்பூசணி (Watermelon Juice) - 90%க்கும் அதிகமான நீர் தொகுப்பைக் கொண்ட தர்பூசணி கோடைக் காலத்தின் சிறந்த பழமாகும். இது உடலை குளிர்விக்கிறது, நீரிழப்பைத் தடுக்கிறது மற்றும் லைகோபீன் (lycopene) போன்ற antioxidants-ஐ வழங்குகிறது.

Watermelon Juice

2. இளநீர் - இயற்கையாகவே எலக்ட்ரோலைட்டுகள் (electrolytes) நிறைந்தது, பேக் செய்யப்பட்ட பானங்களுக்கு ஒரு சரியான மாற்றாகும். நீரேற்றத்தை நமக்கு மீட்டெடுத்துத் தருகிறது; வெப்பத்தால் உண்டாகும் பக்கவாதத்தையும் தடுக்கிறது.

Tender Coconut

3. வெள்ளரி (Cucumber) சாறு - குளிர்ச்சி, alkaline கொண்ட வெள்ளரி சாறு, வயிற்றில் உண்டாகும் அமிலத்தன்மையைக் குறைத்து சருமத்தைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கிறது.

Cucumber Juice

4. Aam Panna (பச்சை மாம்பழ பானம்) - ஒரு பாரம்பரிய இந்திய பானம், Aam Panna வெப்ப சோர்வைத் தடுக்கிறது; உடலுக்குத் தேவையான வைட்டமின் 'சி'யைப் பூர்த்தி செய்கிறது.

Aam Panna

5. எலுமிச்சைச் சாறு - எளிமையாகக் கிடைக்கக்கூடியது. அதேநேரம் சக்தி வாய்ந்த எலுமிச்சைச் சாறு, இந்தக் காலத்தில் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

Lemon Juice

6. ஆரஞ்சு சாறு - புத்துணர்ச்சியைத் தரும், வைட்டமின் சி நிறைந்த இது சோர்வை எதிர்த்துப் போராட உதவுகிறது; நோய் எதிர்ப்புச் சக்தியையும் நாம் பெறலாம்.

Orange Juice

7. அன்னாசி சாறு (Pineapple) - செரிமானத்தை ஊக்குவிக்கும், உடலில் உண்டாகும் அலர்ஜிகளைச் சீக்கிரம் குணமாகிறது.

Pineapple Juice

8. மோர் - வயிற்றைக் குளிர்விக்கும், குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் ஒரு புரோபயாடிக் நிறைந்த பானம்.

Butter milk

9. ஜல்ஜீரா (Jaljeera) - சீரகம், புதினா மற்றும் புளி ஆகியவற்றால் தயாரிக்கப்படும் இது, செரிமானத்தை ஊக்குவிக்கும், அஜீரணத்தைத் தடுக்கும்.

Jaljeera

10. சோல் கதி (Sol Kadhi) - ஒரு கடற்கரையோர விருப்பமான பானம். இது கோகம் மற்றும் தேங்காய்பாலுடன் கலந்து புளிப்பு காரமான இளஞ்சிவப்பு பானமான இது உடலை குளிர்விக்கும் மற்றும் செரிமானத்தை ஆதரிக்கும்.

Sol Kadhi

11. கரும்புச் சாறு - உடல் ஆற்றலை அதிகரிக்ககூடியது, தாதுக்கள் (Minerals) நிறைந்தது.

Sugarcane Juice

12. பப்பாளி சாறு - செரிமானத்தை ஆதரிக்கும், மலச்சிக்கலைத் தடுக்கும்.

Papaya Juice

13. கேரட் சாறு - பீட்டா கரோட்டின்(beta-carotene) வழங்குகிறது, சரும ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.

Carrot Juice

14. பாகற்காய் சாறு - பாரம்பரியமாக உடல் வெப்பத்தைக் குறைக்கவும் எடை மேலாண்மைக்கு உதவவும் பயன்படுத்தப்படுகிறது.

Bitter Guard Juice

15. புதினா-எலுமிச்சை பானம் - நீரேற்றத்தையும், புத்துணர்ச்சியையும் ஒருசேரத் தரக்கூடியது.

Lemon mint Juice

நீர்ச்சத்து நிறைந்த பழங்களான தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்றவற்றை முன்னுரிமையாகக் கொண்டு, எலக்ட்ரோலைட் நிறைந்த தேங்காய் நீரையும் பயன்படுத்துவது, கோடை கால எதிர்மறை தாக்கங்களுக்கு எதிராக 100% பாதுகாப்பை உறுதி செய்கிறது.

Summer Drinks
cooking
சமையலில் சொதப்புறீங்களா? இனி நீங்களும் தான் சமையல் கில்லாடி!