மீன் உணவுடன் இவற்றையும் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு நிச்சயம் கேடுதான்!

ம.வசந்தி

மீன் அனைத்து சத்துக்களும் அடங்கிய உணவாக இருக்கிறது. சில உணவு வகைகளை மீனுடன் சேர்த்து சாப்பிடுவதால் அது உடலுக்கு நன்மைக்கு பதிலாக தீங்கையே விளைவிக்கிறது.

Fruits

அந்த வகையில், மீனுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத 7 வகை உணவுகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

Milk products

பால் பொருட்கள்: பால் மற்றும் பால் பொருட்களுடன் மீன் சேர்த்து சாப்பிடக் கூடாது. மீனை தயிர் அல்லது பாலுடன் சேர்த்து சமைப்பது செரிமான பிரச்னைகளை ஏற்படுத்துவதோடு, அஜீரணம், வயிற்று வீக்கம், வயிற்று வலி, சருமத் தொற்று மற்றும் சருமத்தில் வெள்ளை புள்ளிகள் போன்ற உடல் நலப் பிரச்னைகள் ஏற்படலாம்.

Milk products

புளிப்புப் பழங்கள்: புளிப்புப் பழங்களுடன் மீன் சாப்பிடக் கூடாது. சிட்ரஸ் பழங்களை சாலட்களில் சேர்த்து, மீனுடன் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எலுமிச்சை, ஆரஞ்சு, தக்காளி, கிவி போன்ற சிட்ரஸ் பழங்கள் அசிடிட்டி கொண்டவையாகவும், மீன் புரோட்டீனின் ஆதாரமாகவும் இருப்பதால் இவை இரண்டும் சேர்ந்தால் வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும்.

Citrus Fruits

வறுத்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்: வறுத்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிகளவு டிரான்ஸ் மற்றும் சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளதால் அவை இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் மீனுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது.

Fried foods

உருளைக்கிழங்கு மற்றும் பாஸ்தா உணவுகள்: உருளைக்கிழங்கு மற்றும் பாஸ்தா உணவுகளை எப்படி மீனுடன் சாப்பிட்டாலும் அது செரிமான செயல்முறையை மெதுவாக்கும் என்பதால் மீனுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது.

Potato pasta

பீன்ஸ்: மீனை போலவே பீன்ஸிலும் புரோட்டின் சத்து அதிகம் இருப்பதால் இவை இரண்டையும் சாப்பிடும்போது வயிற்று உப்புசம் மற்றும் வாயு  பிரச்னைகள் ஏற்படும் என்பதால் பீன்ஸோடு மீன் சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

Beans

காபி மற்றும் டீ: மீன் சாப்பிடும்போது காபி, டீ குடிப்பது ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் என்பதால் இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

Tea and Coffee

கார உணவுகள்: மீன் சாப்பிடும்போது அதிக காரமான உணவுகளை சாப்பிடுவதால் மீனின் சுவை குறைவது மட்டுமின்றி, வாயுத் தொல்லை, வயிற்றுப் பிரச்னைகள் மற்றும் இரைப்பைக் கோளாறுகளும் ஏற்படும் என்பதால் காரமான உணவுகளுடன் மீனை சாப்பிடக் கூடாது.

Spicy food

மேற்கூறிய ஏழு வகை உணவுகளுடன் மீன் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் என்பதால் இவற்றை எப்பொழுதும் மீனோடு சேர்த்து சாப்பிட வேண்டாம்.

Dishes
woodrow Wilson
Woodrow Wilson Quotes: வுட்ரோவ் வில்சன் கூறிய 15 பொன்மொழிகள்..!