அதிக சூடான சாதத்தை சாப்பிட தாகம், பித்தம் உண்டாகும்!

மகாலெட்சுமி சுப்ரமணியன்

வெதுவெதுப்பான சூட்டில் உள்ள சாதத்தை சாப்பிட வாத, பித்த கப, திரிதோஷ நோய்கள் வராது. உடல் ஆரோக்கியம், வலிமை உண்டாகும்.

Rice

பழைய சாதம்: வயிற்று வலி, வயிற்று போக்கு ‌குணமாகும். தயிருடன் சேர்த்து சாப்பிட உடல் எரிச்சல், பித்த தலைவலி, பித்த மயக்கம் போன்றவை குணமாகும்.

Fermented rice

குழைந்த சாதம்: இருமல், மாந்தம், பலவீனம் ஏற்படும்.

Overcooked rice

புழுங்கல் அரிசி சாதம்: எளிதாக செரிக்கும். இரைப்பை, குடல் புண்கள் குணமாகும். வாத நோய் வராது.

Rice

பச்சரிசி சாதம்: வாத பலம் தரும். நரம்புக்கு வலுவும் பலமும் உண்டாகும். எளிதில் செரிக்காது.

Rice

கம்பு சாதம்‌: உடல் சூடு குறைந்து வயிற்று எரிச்சல், வயிற்று வலி சரியாகும். உடல் எடை கூடும்.

Pearl millet

கருங்குறுவை சாதம்: வாதம், பித்தம், கபம் இந்த மூன்றையும் சம அளவில் வைத்திருக்கும். வாயு, இடுப்பு வலியைப் போக்கும்.

Karunkuruvai rice

தினை சாதம்: தேன் சேர்த்து சாப்பிட்டால் நரம்பு வலுப்பெறும். நன்றாக பசிக்கும். வாயுவினால் ஏற்படும் மூட்டு வியாதிகள் வராது. புத்திகூர்மை, நினைவுத்திறன், இதய பலம் அதிகரிக்கும். தாதுவிருத்தி, தேக ஆரோக்கியம் உண்டாகும்.

Foxtail millet

வரகு சாதம்: வெட்டை சூடு தணியும். பசி அதிகம் எடுக்கும். உடலுக்கு பலம் உண்டாகும்.

Proso millet

சோள சாதம்: உடலுக்கு நன்மை தரும். மோருடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.

Corn Rice

கேழ்வரகு சாதம்: உடலுக்கு பலம் உண்டாகும். சீதள நோய் குணமாகும். சுக்கு தட்டிப் போட்டு சாப்பிட்டால் நெஞ்சு சளி குணமாகும்.

Finger millet

நெய் சாதம்: கண்ணுக்கு குளிர்ச்சி தரும். நல்ல ஜீரண சக்தி தரும். உடல் உஷ்ணத்தை போக்கி மலச்சிக்கலை நீக்கும்.

Ghee rice

மோர் சாதம்: உடல் எரிச்சல், சிறுநீரக நோய்கள் வராது. மூலநோய் நீங்கும். அடிபட்ட காயம் குணமாகும்.

Buttermilk

ரசம் சாதம்: குளிர் சுரம், அஜீரணம் போன்றவை சரியாகும்.

Rasam

எலுமிச்சை சாதம்: பித்தத்தை குறைக்கும், புளிசாதம்: மலச்சிக்கலை போக்கும், தேங்காய் சாதம்: இஞ்சி சேர்த்து உண்ண வயிற்று புண் குணமாகும்.

Variety Rice
Tree | Imge credit: Pinterest
விசித்திரமான, தனித்துவம் வாய்ந்த மரங்கள்!