நான்சி மலர்
பிரக்கோலி வெறும் காய்கறி மட்டுமல்ல, அது ஊட்டச்சத்துக்களின் சுரங்கம். பலரும் இதன் சுவைக்காக இதைத் தவிர்த்தாலும், இதில் ஒளிந்துள்ள மருத்துவ குணங்கள் வியக்கத்தக்கவை.
பிரக்கோலியில் Sulforaphane என்ற தனித்துவமான கலவை உள்ளது. இது உடலில் உள்ள புற்றுநோய் செல்கள் வளர்வதைத் தடுக்க உதவுகிறது.
அடிக்கடி சளி, காய்ச்சல் பிடிப்பவர்கள் பிரக்கோலியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.
பிரக்கோலி ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதைத் தடுக்கிறது. இதிலுள்ள நார்ச்சத்து இன்சுலினை மேம்படுத்தி நீரிழிவு நோயாளிகளுக்குப் பெரும் உதவியாக இருக்கிறது.
கண் பார்வை மங்குவதைத் தடுத்து கண்களைப் பாதுகாக்கின்றன. இதிலுள்ள Lutein மற்றும் Zeaxanthin கண்களின் விழித்திரையைப் பாதுகாத்து கண்புரை வராமல் தடுக்கிறது.
இது குடல் இயக்கத்தைச் சீராக்கி மலச்சிக்கலைத் தீர்க்கிறது. குடலில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
வைட்டமின் K நிறைந்துள்ளதால், இது எலும்புகளை உறுதிப்படுத்துகிறது. ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு இது சிறந்த உணவு.
இதில் உள்ள வைட்டமின் K மற்றும் கோலின் (Choline) மூளையின் செயல்பாட்டைத் தூண்டுகின்றன. இது ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.
இது கெட்ட கொழுப்பைக் கரைக்க பிரக்கோலி உதவுகிறது. இதனால் மாரடைப்பு போன்ற இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு பெருமளவு குறைகிறது.
உடலில் தேங்கியுள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதிலுள்ள பைட்டோ நியூட்ரியண்ட்கள் கல்லீரலைத் தூண்டி ரத்தத்தைச் சுத்திகரிக்கின்றன.
இதில் உள்ள வைட்டமின் C மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உதவுகின்றன. இது உங்களை நீண்ட காலம் இளமையாக வைத்திருக்க உதவும்.