சி.ஆர்.ஹரிஹரன்
தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
ஆரஞ்சுச் சாற்றுடன் ஒரு தேக்கரண்டி தேன், சிட்டிகை உப்பு சேர்த்து அருந்தினால் ஜலதோஷம், சளி, தொண்டைப்புண் குணமாகிவிடும்.
தொடர் விக்கலுக்கு மாதுளம் பழச்சாறு குடித்தால் உடனடியாக பலன் கிடைக்கும்.
மாதுளம் பழச்சாற்றை தேனுடன் கலந்து ஒரு மாதக்காலம் தொடர்ந்து குடித்து வந்தால் ரத்த சோகை விலகிவிடும்.
சப்போட்டா பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட புண்கள், குடல் புண் போன்ற உபாதைகள் நீங்கி விடும்.
தொப்பை மற்றும் வயிற்றைச் சுற்றியுள்ள ஊளைச் சதையை குறைக்க, அன்னாசிப் பழத்துண்டுகளுடன் புதினா, வெள்ளரித்துண்டுகளை மிதமான சுடுநீருடன் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
குழந்தைகளுக்கு இரவு நான்கு பேரீச்சம் பழம் கொடுத்து பால் அல்லது தண்ணீர் குடிக்கக் கொடுத்தால் அவர்களது மனோபலம் கூடும், மூளை பலப்படும்.
பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி, கைகால் தளர்ச்சி போன்றவை சரியாகும்.
எலுமிச்சம் பழச்சாற்றில் தேன் கலந்து பருகி வர வறட்டு இருமல் குணமாகும்.
தினமும் பப்பாளிப்பழம் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம், மண்ணீரல் வீக்கம், மற்றும் கல்லடைப்பு போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
நான்கு நாட்கள் தொடர்ந்து பப்பாளிப் பழத்தை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் பல்வலி, பல்லில் ரத்தம் வடிதல், பல் ஈறுகளில் வரும் நோய் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
இடுப்பு சதை குறைய வேண்டுமா? அன்னாசிப் பழத்தை வெட்டி ஓமம் சேர்த்து வேக வைத்து வடிகட்டி குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.