சுடர்லெட்சுமி மாரியப்பன்
கொத்துமல்லி விதையை வறுத்து, ஒன்றிரண்டாக அரைத்து கொதிக்க வைத்து காலை, மாலை இரண்டு வேளையும் பருகி வர அஜீரண கோளாறுகள் நீங்கும்.
மூக்கில் விக்ஸ் தடவிவிட்டு, அடுப்பில் ஒரு சூடான பாத்திரத்தில் கர்சீப்பை வைத்து சூடு பண்ண வேண்டும். அந்த கர்ச்சீப்பை மூக்கில் ஒத்தடம் கொடுக்க, மூக்கடைப்பு உடனே நீங்கி விடும்.
தினமும் வெறும் வயிற்றில் அதிகாலை இரண்டு சிறிய வெங்காயம் சாப்பிட்டு வர, ஜலதோஷம் பிடிக்காது.
கொதிக்க வைத்து ஆறிய நீரில், சீரகப் பொடியைப் போட்டு 12 மணி நேரம் ஊற வைத்துக் குடித்தால் ரத்தக் கொதிப்பு சீராகும்.
இருமல் அதிகமாக இருந்தால் படுக்கும் முன் உள்ளங்காலில் விக்ஸ் நன்றாகத் தேய்த்து இரண்டு கால்களிலும் சாக்ஸைப் போட்டுக்கொண்டு தூங்கினால் இருமல் குறையும்.
புகை பிடிக்கும் பழக்கத்தை விட முடியாதவர்களுக்கு அகத்திக் கீரை சிறந்த மருந்து. புகைபிடிப்பதால் மூச்சுக் குழாயிலும் இருதயத்திலும் படியும் விஷத்தன்மையை அகத்திக்கீரை முறியடித்துவிடும்.
மூக்கில் தண்ணீர் கொட்டுகிறதா? தேங்காய் நார்க் கொண்டு புகை போடுங்கள். அந்த புகையை உறிஞ்சினால் கொண்டும் நீர் உடனே நின்று விடும்.
காலில் பித்தவெடிப்பா? தேனையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் குழைத்து, பித்த வெடிப்பில் தடவி வந்தால், பித்த வெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
மூட்டு வலியா? பூண்டை விழுதாய் அரைத்து வலிக்கும் மூட்டு பகுதியில் தடவி வர மூட்டு வலி குணமாகும்.
சிவப்புச் செம்பருத்திப் பூவின் இதழ்களை (ஒரு பூவின் இதழ்களுக்கு ஒரு தம்ளர் என்ற கணக்கில்) தண்ணீர் பாதியளவு வரும்வரை கொதிக்கவிட்டு, தினமும் மூன்று வேளை பருகி வர, உடலில் ரத்த விருத்தி உண்டாகும்.
மன அழுத்தம் குறைய சிவபெருமானுக்கு உகந்த இலையான வில்வ இலைகளை, (சுமார் ஆறு ஆர்க்குகள்) ஒரு தம்ளர் நீரில் முதல் நாள் இரவே ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் அந்நீரைப் பருக வேண்டும்.
கையில் தீப்புண் பட்டுவிட்டால் உடனே ஒரு கிண்ணத்தில் பாலை ஊற்றி அதில் கையைக் கொஞ்ச நேரம் நனைத்துக்கொண்டால் போதும் புண் ஆறிவிடும்.
சாதம் கொதிக்கும் போது, கஞ்சி ஒரு கப் எடுத்து, அதில் கொட்டைப் பாக்கு அளவு வெண்ணெயைப் போட்டு கர்ப்பிணி பெண்கள் பருகி வந்தால், சுகப் பிரசவம் ஆகும்.
சுத்தம் செய்த அருகம்புல்லையும், துளசியையும் சம பங்கு எடுத்து ஜூஸாக்கி, அத்துடன் தேன் சேர்த்து தினமும் 100 மி.லி. குடித்தால் கெட்ட கொழுப்பு நிச்சயமாகக் குறைந்துவிடும்.
சிலருக்குப் பயத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு போன்றவற்றைச் சமைத்து சாப்பிடுவதால் வாயு தொல்லை ஏற்படும். இந்த பருப்புகளைச் சமைக்கும் முன் வெறும் வாணலியில் வறுத்தபின் வேக வைத்தால் வாயு தொல்லை ஏற்படாது.