எந்தெந்த கீரையில் என்னென்ன சத்துக்கள் உள்ளன தெரியுமா?

ஆர்.ஜெயலட்சுமி

கீரை வகைகள் மனிதனுக்கு எண்ணற்ற பயன்களை அளிக்கின்றன இதில் என்னென்ன சத்துக்கள் எந்தெந்த அளவுகளில் உள்ளன என்பதை அறிந்து கொள்வோம்!

புதினா கீரையில் போலிக் அமிலம் 114 மைக்ரோகிராம் கால்சியம்   200 மில்லி கிராம் இரும்புச்சத்து 15 புள்ளி 6 மில்லி கிராம் வைட்டமின்  ஏபிசி சிறிதளவு உள்ளன இது ரத்த சோகையை போக்க வல்லது.kothamalli

கொத்தமல்லி கீரையில் கால்சியம் 184 மில்லிகிராம் இரும்பு சேர்த்து 1042 மில்லிகிராம் வைட்டமின் ஏ 8 918 மைக்ரோகிராம் உள்ளன பாஸ்பரஸ் வைட்டமின் பிசி உள்ளன இது பார்வை கோளாறு ரத்தசோகை ஆகியவற்றை போக்கும்.

முளைக்கீரையில் இரும்பு சேர்த்து 22.9 மில்லி கிராம் கால்சியம் 397 மில்லிகிராம் பாஸ்பரஸ் வைட்டமின்கள் ஏ பி சி சிறிதளவு உள்ளன . ரத்த சோகையைபோக்கும் திறன் உள்ளது.

அகத்திக் கீரையில் கால்சியம்  1130 மைக்ரோ கிராம் 3.9 மில்லி கிராம் வைட்டமின் ஏ 5400 மைக்ரோகிராம் உள்ளன வைட்டமின்கள் பிசி சிறிதளவு உள்ளன.

பொன்னாங்கண்ணிக் கீரையில் இரும்பு சத்து 163 மில்லி கிராம் கால்சியம் 510 மில்லி கிராம் பாஸ்பரஸ் வைட்டமின் ஏ பி சி உள்ளன.

பசலைக் கீரையில் வைட்டமின் ஏ 5,580 மைக்ரோகிராம் கால்சியம் பாஸ்பரஸ் இரும்புச்சத்து 1.14 மில்லி பொட்டாசியம் 306 மில்லி கிராம் போன்றவை உள்ளன.

வெந்தயக் கீரையில் கால்சியம் 395 கிராம் வைட்டமின் ஏ 2340 மைக்ரோகிராம் இரும்பு சேர்த்து 1.93 கிராம் உள்ளன.

புளிச்ச கீரையில் இரும்பு சத்து 2.28 மில்லி கிராம் வைட்டமின் ஏ 2898 மைக்ரோகிராம் கால்சியம் பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி உள்ளன.

முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ 6780 மைக்ரோகிராம் வைட்டமின் சி 200 மில்லி கிராம் இரும்புச்சத்து கால்சியம் 440 மில்லி கிராம் பாஸ்பரஸ் மற்றும் சிறிதளவு வைட்டமின் பி போன்றவை உள்ளன.

கருவேப்பிலையில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இது பார்வை கோளாறுகளை தடுக்கும்.

இந்தியாவின் அதிகம் அறியப்படாத அழகிய 9 தீவுகள்!