இரவிசிவன்
உப்புக்கடலை - இது மிக எளிதில் கிடைக்கக் கூடிய ஒரு முழுமையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, ஆரோக்கியமான, சக்தி வாய்ந்த, அற்புதமான ஒரு 'சூப்பர் ஃபுட்'.
பயறு வகைகளிலேயே ஊட்டச்சத்துகளின் நாயகன் என்று சொல்லும் அளவிற்கு உயர்ந்தவன்!
கார்போஹைட்ரேட், புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் ஆகிய அனைத்து சத்துக்களின் மொத்த வடிவமாகத் திகழ்வது உப்புக்கடலை ஆகும்.
பெரிய வாணலியில் - சலித்த ஆற்று மணலைச் சூடாக்கி கொண்டைக்கடலையுடன் உப்பும், மஞ்சளும் கலந்த நீர் தெளித்து வறுப்பதையே 'உப்புக்கடலை' என்பர்.
தினமும் ஒரு கைப்பிடி உப்புக்கடலை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன என்று விரிவாகப் பார்க்கலாமா?
எண்ணெயில் பொரித்த உடலுக்குத் தீங்கு செய்யும் Snacks களுக்கு மிகச்சிறந்த மாற்றாக இதை எடுத்துக் கொள்வதன் மூலம் அடுத்த வேளை உணவில் எடுத்துக் கொள்ளும் கலோரியின் அளவைக் குறைக்க முடியும்.
உப்புக்கடலையின் கிளைசெமிக் குறியீடு 28 மட்டுமே. குறைந்த கிளைசெமிக் அளவீடு (Glycemic index) கொண்டிருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த நொறுக்குத்தீனியாக விளங்குகிறது.
உப்புக்கடலையில் உள்ள பாஸ்பரஸ் நம்முடைய உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினையை தவிர்க்க உதவும். நார்ச்சத்தும் அதிகம் இருப்பதால் இதைச் சாப்பிடும் போது நம் உடலுக்கு உடனடியாக ஆற்றல் கிடைக்கிறது.
உப்புக்கடலையில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் மாங்கனீசு ஆகியவை எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகின்றன. மூட்டு வலி முதல் எலும்பு சம்பந்தமான தொற்றுக்கள், எலும்பு புற்றுநோய் போன்ற பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆற்றல் மிக்கது.
மூளையின் சரியான செயல்பாட்டிற்கு அவசியமான கோலினின் சிறந்த ஆதாரமாகத் திகழ்ந்து மனம் மற்றும் அறிவாற்றல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
நரம்புகளின் செயல்பாட்டிற்கு முக்கியமான தாதுவான மெக்னீசியமும் கருப்பு கொண்டைக்கடலையில் ஏராளமாக உள்ளது. இது வறுத்த உப்புக்கடலையிலும் அப்படியே தக்கவைக்கப் படுவது இதன் சிறப்பு.
எனவே, தினமும் ஒரு கைப்பிடி வறுத்த உப்புக்கடலையை எடுத்துக் கொள்வது - நம் உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த மிக எளிமையான, சிறந்த வழியாகும்.