ஆர்.ஜெயலட்சுமி
அன்றாட வாழ்வில் பயன்படும் 10 எளிமையான வீட்டு வைத்தியக் குறிப்புகளை நமது சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே செய்யலாம்.
தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து நன்கு சுட வைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
கருஞ்சீரகத்தை எண்ணெயில் கருக வறுத்து அதனை அரைத்து பூசி வர தேமல் மறையும்.
வறுத்த சீரகத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.
வேப்பிலையை அரைத்து கட்டி வந்தால் ஆறாத ரணமும் ஆறும்; உடையாத பழுத்த கட்டியும் உடைந்து விடும்.
பாகற்காய் வற்றலை உணவுடன் உண்டு வந்தால் மூலம், காமாலை நோய்கள் தீரும்.
மாம்பழ சாறுடன் தேன் கலந்து பருகினால் நரம்பு தளர்ச்சி குணமாகும். தேன் நரம்புகளுக்கு வலிமை தரும்.
முருங்கைக்காயை நறுக்கி பொறியல் செய்து அல்லது சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் பற்கள் வலுவடையும். தினமும் சாப்பிட்டால் வயோதிகத்திலும் பற்கள் நன்றாக உறுதியாக இருக்கும்.
இரவு உணவை முடித்த பின் ஒரு தேக்கரண்டி தேன் அல்லது மிதமான சூட்டில் ஒரு டம்ளர் பால் சாப்பிட்டால் நிம்மதியான தூக்கம் வரும்.
இரண்டு சிறிய வெங்காயத்தை தோலை உரித்து விட்டு அதனுடன் ஆறு மிளகையும் வைத்து மைய அரைத்து உள்ளுக்கு சாப்பிட்டு வர நீராகவடியும் சளித்தொல்லை நீங்கும்.
மருதாணி இலையை எலுமிச்சை சாற்றில் கலந்து அரைத்து கட்டினால் குதிகால் வாதம் பாத எரிச்சல் தீரும்.