கிரி கணபதி
உணவு மற்றும் மூலிகை சப்ளிமெண்ட்ஸ் உடலுக்கு நல்லதுன்னு நாம நெனச்சிட்டு இருக்கோம். ஆனா புது ஆய்வு ஒன்னு அதிர்ச்சி தகவலை சொல்லியிருக்கு.
சமீபத்திய ஆய்வு: மூலிகை சப்ளிமெண்ட்ஸ் கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும். பலரும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்படலாம் என எச்சரிக்கை.
மஞ்சள்: பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்தது. கீல்வாதம், செரிமான பிரச்சனைக்கு நல்லதுன்னு சொல்றாங்க. ஆனா கல்லீரலுக்கும் ஆபத்தாம்.
கிரீன் டீ: உடல் எடை குறைய, செரிமானம் ஆக, புற்றுநோயை எதிர்த்து போராட உதவுது. ஆனா அதிகமா குடிச்சா கல்லீரலுக்கு பிரச்சனை வரும்னு எச்சரிக்கை.
அஸ்வகந்தா: மன அழுத்தம், பதட்டத்தை குறைக்க உதவுது. ஆனா அதிகமா சாறு எடுத்த அஸ்வகந்தா சப்ளிமெண்ட்ஸ் கல்லீரலுக்கு பாதிப்பை உண்டாக்குமாம்.
15 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் இந்த சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்குறாங்க. ஒரு மாசத்துக்கு மேல எடுத்தவங்களுக்கு கல்லீரல் பாதிப்பு அதிகம்னு ஆய்வு சொல்லுது.
எல்லோருக்கும் பாதிப்பு வராது. ஆனா கல்லீரல் நச்சுத்தன்மைக்கு காரணமான இந்த சப்ளிமெண்ட்ஸ் பத்தி தெரிஞ்சிக்கோங்க.
கல்லீரல் நோய்னா என்ன? இது ஒரு ஆபத்தான நிலை. ரத்தத்தில் இருந்து நச்சுகளை வடிகட்டும் முக்கிய உறுப்பு கல்லீரல். நச்சு அதிகம்னா பாதிப்பு உறுதி.
வைரஸ் தொற்றுகள், நச்சுக்கள், வளர்சிதை மாற்ற பிரச்சனைகள் கல்லீரல் நோய்க்கான காரணங்கள். கல்லீரல் பாதிப்படைஞ்சா மீட்கிறது கஷ்டம்.
கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள் ஆரம்பத்துல தெரியாது. ஆனா சில நேரம் கடுமையான ஹெபடைடிஸ் மாதிரி தொடங்கும். ஜாக்கிரதையா இருங்க.
சப்ளிமெண்ட்ஸ் எடுக்குறதுக்கு முன்னாடி டாக்டர்கிட்ட கண்டிப்பா ஆலோசனை கேளுங்க. உடல் ஆரோக்கியம் முக்கியம்! அலட்சியம் வேணாம்.
மூலிகை சப்ளிமெண்ட்ஸ் நல்லதுன்னு நினைச்சு எடுக்குறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிங்க. கல்லீரல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுங்க. மருத்துவர் ஆலோசனை இல்லாம எதுவும் பண்ணாதீங்க.