பத்மப்ரியா
முருங்கை பட்டையுடன், கடுகு சேர்த்து அரைத்து பற்று போட்டால் வாய்வு பிடிப்பு அகன்று விடும்.
உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்.
பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும். வலி குறையும்.
வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.
வாய் துர்நாற்றம் ஏற்பட்டால் கடுக்காய், தான்றிக்காய், நெல்லி வற்றல் மூன்றையும் பொடித்து, நீரில் ஊற வைத்து அந்த நீரில் அடிக்கடி வாயை கொப்பளித்தால் வாடை போய்விடும்.
பித்த மயக்கம் அடிக்கடி வந்தால் பசலைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்தால் நிவாரணம் கிடைக்கும்.
ஒரு ஸ்பூன் தேனை ஒரு நாளைக்கு மூன்று முறை சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு நீங்கும்.
நந்தியாவட்டை இலைகளை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரில் குளித்து வந்தால், உடலில் சொரி, சிரங்கு போன்றவை வராது.
உஷ்ணத்தால் வயிற்று வலி ஏற்பட்டால் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை அரை கப் தயிரில் கலந்து உண்டால் போதும். வயிற்று வலி நீங்கும்.
டீ டிகாஷனுடன் எலுமிச்சை சாறு கலந்து பருகி வர, வயிற்றுப்போக்கு நின்று விடும்.
தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வந்தால், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.