மகாலெட்சுமி சுப்ரமணியன்
வீட்டில் உள்ள நம் சமையலறை காய்கறிகளால் உடலை ஆரோக்கியமாக (traditional health hacks) வைத்துக் கொள்ள முடியும். அதற்கான சில வழிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
பீட்ரூட் சாறுடன், வெள்ளரிக்காய் சாறு சேர்த்து பருகி வர உடல்சூடு தணியும். பித்தப் பையில் கற்கள் உருவாவதை தடுக்கும்.
பூண்டு சாற்றில் சிறிது உப்பு கலந்து சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் தடவி வர சுளுக்கு மறையும்.
வெங்காயத்தை நறுக்கி பசுநெய்யோடு வதக்கி காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமாகும்.
முட்டைக்கோஸ் சூப் சாப்பிட்டு வர முகச்சுருக்கம் நீங்கும். வெள்ளரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள முகப்பரு வராது. மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் சருமவறட்சி நீங்கும்.
மணத்தக்காளி கீரை சூப் அருந்தி வர குடல்புண் வராது. வாய்ப்புண்ணை போக்கி உடலை குளிர்விக்கும்.
கிராம்பை அரைத்து நெற்றியில் பற்று போட, தலைவலி நீங்கும்.
வெங்காயத்தை தினமும் விளக்கெண்ணெய் விட்டு வதக்கி சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும். குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும்.
கறிவேப்பிலை,வெந்தயம், கரிசிலாங்கண்ணி இவற்றை ரெகுலராக உணவில் சேர்த்துக் கொள்ள இளநரை வராது. முடிவளர்ச்சியை தூண்டி முடி உதிர்வது குறையும்.
இஞ்சியை நறுக்கி தேனில் ஊற வைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
காரட் சாறு அருந்திட மாதவிலக்கு வயிற்று வலி நீங்குவதோடு முகப்பொலிவு கூடும். கண்பார்வையை மேம்படுத்தி நரம்புகளுக்கு பலம் கொடுக்கும்.
இடுப்பு பகுதி கொழுப்பு குறைய இஞ்சியை ஒரு டம்ளர் மோரில் கலந்து குடித்தால் உடல் எடை குறையும். குடல் ஆரோக்கியம் மேம்படும்.
கறிவேப்பிலையை அரைத்து மோரில் கலந்து அருந்த வயிற்று வலி, வயிற்று பொருமல் நீங்கும்.
வாழைத்தண்டு சாறு குடல்புண் குணமாக உதவுவதுடன் எடையைக் குறைத்து, தீப்பட்ட புண்ணை விரைவில் ஆற்றுவதற்கும் உதவும்.
இவ்வாறு நம் வீட்டில் உள்ள காய்கறிகளே நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.