எஸ்.ராஜம்
தேங்காய் எண்ணெயுடன் மஞ்சளைக் சேர்த்து, குளிப்பதற்கு முன்பு, காலில் தடவிக் குளித்தால் (Rainy season foot care tips) சேற்றுப்புண் வராது.
உப்பு, கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. சேற்றுப்புண்ணுக்கு மருந்து பயன்படுத்துவதற்கு முன்பு உப்பு நீரை பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் அது முழுமையாக புண்ணை குணமாக்கும்.
இடித்த பூண்டுடன் தேங்காய் எண்ணெய் கலந்து கால்களில் பயன்படுத்தலாம். சேற்றுப் புண் விரைவில் குணமாகும்.
விரல் இடுக்குகளில் மருதாணி மற்றும் மஞ்சளை அரைத்து தடவி வர சேற்றுப்புண் ஆறிவிடும்.
கடுக்காய் தூள், மாசிக்காய் தூள், தான்றிக்காய் தூள் போன்ற துவர்ப்புள்ள பொடிகளால் புண்ணை கழுவி சுத்தம் செய்தால், புண் விரைவில் ஆறி விடும்.
விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், மஞ்சள் பொடி கலந்து கால் விரல்களில் தடவி வர சேற்றுப்புண் ஆறும். குளிர்காலத்தில் வரும் கால் வலியும் கட்டுப்படும்.
குழந்தைகளுக்கு காலில் சேற்றுப்புண் வந்தால் வெண்ணெயை தடவினால், எரிச்சல் அடங்கும்.
உளுந்தம் பருப்பு, ரவை இரண்டையும் பொடித்து, எலுமிச்சை சாறு கலந்து, குழைத்து, சேற்றுப் புண்களில் தடவி ஒரு மணி நேரம் கழித்து துடைத்து, சிறிது கிளிசரின் தடவி வர ஒரு வாரத்தில் சேற்றுப்புண் ஆறும். கால் விரல்களும் மென்மையாகும்.
காய்ச்சிய வேப்ப எண்ணெய் தடவி வர சேற்றுப்புண் குணமாகும்.
கீழாநெல்லி இலையை மஞ்சள் சேர்த்து அரைத்து சேற்றுப்புண் உள்ள இடத்தில் ஐந்து நாட்கள் இரவில் தடவிவர சேற்றுப் புண் ஆறிவிடும்.