பொ.பாலாஜிகணேஷ்
பொதுவாக நம் உடலுக்கு சிறந்த எக்சர்சைஸ் வாக்கிங். எனவே, வாக்கிங் போகும்போது சில வழிமுறைகளை கடைபிடித்தல் நலம் சேர்க்கும்.
சிலர் வாக்கிங் போக செருப்பு அணிந்திருப்பர். நடைபயிற்சி செய்ய சரியான குதிகால் சப்போர்ட் உள்ள ஷூக்களை கண்டிப்பாக அணியவேண்டும்.
நடைபயிற்சி செய்யும்போது தளர்வான உடை அணிந்திருக்க வேண்டும்.
வாக்கிங் போகும்போது தாகம் எடுக்கும். அதனால் நடைபயிற்சி செய்யும்போது ஒரு பாட்டிலில் தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டும்.
பகல் வேளையில் வெளியே நடைபயிற்சி செல்பவர் என்றால் சன் ஸ்கிரீன் உபயோகிக்க பரிந்துரைக்கின்றனர்.
நடைப்பயிற்சி செய்யும்போது, நேராகப் பார்த்தபடி உடலை நிமிர்த்தி நடக்க வேண்டும். உடல் தளர்வாக வைத்து நடப்பது சரியல்ல. நடைபயிற்சி சமதளத்தில் மேற்கொள்வது சிறந்தது.
வாக்கிங் போகும்போது குதிகால்களிலிருந்து விரல்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்.
சிலருக்கு தனியாக நடக்க கஷ்டமாயிருக்கும். அப்படி தனியாக நடக்க போரடித்தால் நண்பர்களுடன் பேசிக்கொண்டே நடக்கலாம்
நடைப்பயிற்சி செய்பவர்கள், முதலில் 10 நிமிடங்களில் தொடங்கி, பிறகு 20 நிமிடங்கள், அடுத்து 30 நிமிடங்கள் என அதிகரித்தல் நல்லது.
முதல்நாளே நீண்ட தூரமோ, அதிக நேரமோ நடக்க நினைக்க வேண்டாம். அப்படிச் செய்தால் களைப்பாகி விடும். மேலும், கால்வலியால் அடுத்தநாளே வாக்கிங் செல்ல முடியாமல் போகலாம்.
காலை 6 மணிக்கு நடைபயிற்சி செய்வது மிகவும் சிறந்தது. மாலை 4 மணிக்குப் பிறகும் நடைபயிற்சி செய்யலாம்.
நடைபயிற்சி செய்வதால் சூரியனிடமிருந்து வைட்டமின் டி இயற்கையாகக் கிடைக்கிறது. கெட்ட கொலஸ்டிரால் கொழுப்பு எரிக்கப்பட்டு இதயம் நன்கு செயல்பட உதவுகிறது. உடல் எடை குறைக்கப்படுகிறது. முட்டிகள் வலுவேற்றப்படுகிறது.
முதியோர்கள், வேலைபளுவின் காரணமாக நேரம் இல்லாதவர்கள், வீட்டிலேயே எண் ‘8’ வரைந்து நடைப்பயணம் மேற்கொள்ளலாம். நடைபயிற்சிக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்குமோ, எண் ‘8’ல் அந்த நன்மைகளைப் பெறலாம்.
நடைபயிற்சி செய்யும்போதே சில சுலபமான உடற்பயிற்சிகள் செய்வதும் நல்லது. கண்களுக்கும் பயிற்சி அளிக்கலாம்.
நடைபயிற்சியின்போதே மூச்சுப் பயிற்சியும் செய்வது நல்லது.
நடைபயிற்சியினால் மன அழுத்தம் குறைகிறது. கற்பனைத்திறன் மேம்படுகிறது.