எஸ்.மாரிமுத்து
உடற்பயிற்சி என்பது மருத்துவம்.
விரதம் இருப்பதும் ஒரு மருத்துவம்.
இயற்கை உணவுகள் உண்பது மருத்துவம்.
சிரிப்பு என்பதும் ஒரு மருத்துவம்.
நல்ல தூக்கம் ஒரு மருத்துவம்.
பச்சைக் காய்கறிகளை உண்ணுவது மருத்துவம்.
தினமும் சூரிய ஒளியில் நிற்பதும் ஒரு மருத்துவம்.
ஒருவரிடம் அன்பாய் இருப்பதும், பேசுவதும் ஒரு மருத்துவம்.
நன்றி உணர்வோடு மற்றவர்களிடம் இருப்பதும் ஒரு மருத்துவம்.
தவறை மன்னிப்பது ஒரு மருத்துவம்.
தியானம் செய்வதும் ஒரு மருத்துவம்.
இறைவனை நினைப்பதும், துதிப்பதும் ஒரு மருத்துவம்.
மனதிற்கு பிடித்தமான பாடல் பாடுவதும், கேட்பதும் நடனம் ஆடுவதும் ஒரு அற்புதமான மருத்துவம்.
சரியாக சிந்திப்பதும் சரியான மனநிலையில் இருப்பதும் ஒரு மருத்துவம்.
நல்ல நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதும் சிரித்து பேசுவதும் ஒரு நல்ல மருத்துவம்.