கலைமதி சிவகுரு
கீரைகளை பச்சையாகவும், சமையல் செய்தும் உண்ணலாம். பொரியல், அவியல், துவையல், சூப் வகையும் செய்யலாம்.
கோவைக் கீரை: இக்கீரையை கொழும்பு சத்து மிகுந்த கீரை என்று சொல்லலாம். இதில் அதிக அளவு தாதுக்களும், வைட்டமின் ‘ஏ' உயிர்சத்தும் அடங்கி உள்ளன.
கொத்தமல்லிக் கீரை: இக்கீரையில் போதிய அளவு அனைத்து தாது உப்புகளும் நிரம்பி உள்ளன. அதிக அளவு இரும்புசத்து கொண்டது மல்லிக்கீரை.
குப்பைக் கீரை: புரதச்சத்து மிகுதியாய் உள்ள இக்கீரையானது வைட்டமின் ‘சி' என்னும் ஒரே ஒரு உயிர்சத்தை தன்னுள் கொண்டுள்ளது. அதுவும் அதிகமாக உள்ளது.
காரட் கீரை: இக்கீரையில் உயிர்சத்துகளாகிய வைட்டமின் ஏ, சி மிகுதியாக உள்ளது. 100 கிராம் கீரையில் 340 மி.கிராம் சுண்ணாம்பு சத்தும், 88மி.கிராம் இரும்புசத்தும் இருக்கின்றன.
கறிவேப்பிலை: இது வெள்ளிச்சத்து நிறைந்தது. நிறைய தாதுப்புகளும், உயிர்சத்துக்களும் கொண்டது. வைட்டமின் ஏ யும், சி யும் நிரம்பப்பெற்றது. 100 கிராம் கருவேப்பிலையில் 830 மி.கிராம் சுண்ணாம் புசத்தும், 132 மி.கிராம் இரும்புசத்தும், 0.21மி.கிராம் தாமிர சத்தும், 81மி.கிராம் கந்தகசத்தும் இருக்கின்றன.
கரிசலாங்கண்ணிக் கீரை: வெள்ளை, மஞ்சள் என கரிசலாங்கண்ணிகளில் இரண்டு தங்கசத்துக்கள் உள்ளன. வெள்ளையில், கறுப்புத்தங்கமும்(இரும்புசத்தும்), மஞ்சளில், மஞ்சள்தங்கமும் (தங்கசத்தும்) இருப்பதால் பல நன்மைகளை தரும் என்பதில் ஐயமில்லை.
அறு கீரை: இது தங்கசத்தும், இரும்பு சத்தும் தாங்குகின்ற மிகச்சிறந்த ஊட்டச்சத்து. 100 கிராம் அறு கீரையில் 364 மி. கிராம் சுண்ணாம்பு சத்தும் 52 மி.கிராம் மணிச் சத்தும், 385 மி.கிராம் புரதசத்தும் கிடைக்கிறது.
அகத்திக் கீரை: அகத்திக்கீரையில் 63 சத்துக்கள் இருக்கின்றன. அந்த சத்துக்கள் மனித உயிர்களுக்கும், கால்நடைகளுக்கும் ஒருபெரும் சொத்தாக அமைகின்றன. வைட்டமின் ஏ, பி, சி, உயிர் சத்துக்கள் மிகுந்த கீரை.
சிறு கீரை: இதில் உள்ள இரும்புசத்தும், புரதச்சத்தும் உடம்பில் வலிமையை ஊட்டுகிறது. 100 கிராம் கீரையில் 251 மி. கிராம் சுண்ணாம்பு சத்தும், 55 மி.கிராம் மணிச்சத்தும், 27.3 மி.கிராம் இரும்புசத்தும் இருப்பதால் தாதுப்புகள் உடலுக்கு தெம்பூட்டுகின்றன.
சேப்பங்கீரை: சேப்பங்கீரையில் ஒரு சிறப்புதன்மை உள்ளது. உலர்ந்தக் கீரையிலும் உணவுசத்துக்கள் நிறைந்துள்ளன. சுண்ணாம்புசத்தும், மணிச்சத்தும் அதிக அளவில் கிடைக்கின்றன.
என்றும் இளமையுடன் வாழ ஏற்ற சஞ்சீவி கீரைகளில் தினமும் ஒரு கீரை என்று உணவில் சேர்த்துக்கொள்வோம். சக்தியும், ஆரோக்கியமும் பெறுவோம்.