எஸ்.மாரிமுத்து
செரிமான சிக்கலுக்கு:
குளிர்ந்த நீரில் எலுமிச்சை சாறு உப்புக்கலந்து குடித்தால் சரியாகும்.
டயரியா சரியாகணுமா?
ஒரு கிளாஸ் மோரில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், சிறிது உப்பு கலந்து அரை மணி நேரத்திற்கு ஒரு முறை குடித்தால் சரியாகும்.
வயிற்றுப் போக்கு சரியாக:
அரிசிக் கஞ்சியுடன் புளிப்பில்லாத மோர் கலந்து குடித்தால் தண்ணீர் சத்துக் கிடைக்கும். ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு மூடி எலுமிச்சை சாறு 1 சிட்டிகை உப்பு, 1 சிட்டிகை சர்க்கரை சேர்த்து குடித்தால் சரியாகும்.
வயித்துல பூச்சி சரியாக:
குழந்தைகளுக்கு வயித்துல பூச்சி இருந்தால், மலத்துவாரத்தில் உள்ள குடைச்சல் சரியாக, வேப்பிலை சாறு அல்லது வேப்ப எண்ணெயை தடவினாலும் சரியாகும்.
மலச்சிக்கல் சரியாக:
பப்பாளிப்பழம், அத்திப் பழத்தை இரவில் சாப்பிடலாம். காய்ந்த திராட்சையை ஊறவைத்து காலையில் சாப்பிட மலச்சிக்கல் சரியாகும்.
வாய்ப்புண் சரியாக:
வயிற்றுப்புண் இருந்தா வாயில் காண்பிக்கும். இதற்கு மணத்தக்காளி கீரை சாறு எடுத்து, தேன் கலந்து அடிக்கடி குடித்து வந்தால் வாய்ப்புண் சரியாகும்.
ஜீரணம் சரியாக:
Non-Veg சாப்பிட்டு அஜீரணமாக இருந்தால் எலுமிச்சை சாறு, புதினா சாறு, இஞ்சிச் சாறு, தேன் கலந்து குடித்தால் சரியாகும்.
பசியே இல்லியா?
கொத்தமல்லிச் சாறுடன், சிறிது தேன் கலந்து குடித்தால் பசி தானா வந்து விடும் காய்கறி சூப்பில், சிறிது பூண்டு, இஞ்சியைத் தட்டி போட்டு அரைமூடி எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் கபகபன்னு பசி எடுக்கும்.
தலைப் பொடுகு சரியாக:
தேங்காய்ப் பாலில் வெள்ளை மிளகு அல்லது வால் மிளகு சேர்த்து அனைத்து தலையில் தேய்த்து 15 நிமிஷம் கழித்து பாசிப்பருப்பு மாவு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு போய் விடும். எலுமிச்சை சாறு தலையில் தேய்த்து குளித்து வந்தால் சரியாகும். வேப்பிலை + துளசி இலையை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் சரியாகும்.
முகம் பொலிவு பெற:
தயிரில் கஸ்தூரி மஞ்சள் கலந்து பூசி பத்து நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் பள பளப்பாகும்.
உடல் சூடு தணியணுமா?
அகத்திக்கீரை சாறுடன் நல்லெண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து பால் சேர்த்து, நைசாக அரைத்து அதில் ஊற்றி தைல பதத்தில் காய்ச்சி இறக்கி வடிகட்டி தலையில் தேய்த்து, அரக்கு தேய்த்துக் குளித்தால் உடல் சூடு தணியும்.
தாய்ப் பால் பெருக:
பாசிப்பயறு, பூண்டு, வெந்தயம், புழுங்கல் அரிசி குருணை, சீரகம் சேர்த்து கஞ்சி மாதிரி காய்ச்சி குடித்தால் தாய்ப்பால் சுரக்கும்.
எலும்பு பலப்பட:
பிரண்டையை துவையலாக அரைத்து சாப்பிடலாம். முருங்கை இலை அடை, கருப்பட்டி கலந்த எள்ளுருண்டை சாப்பிட எலும்பு பலப்படும்.
பூச்சிக் கடி சரியாக:
பூச்சிக் கடிபட்ட இடத்தில் வெங்காயச் சாறு எடுத்து தடவி வந்தால் வீக்கம் வலி சரியாகும்.
வயிறு உப்பும் சரியாக:
இஞ்சிச்சாறு, எலுமிச்சைச் சாறு, புதினா சாறு, தேன் கலந்து குடித்தால் வயிறு உப்புசம் சரியாகும்.
தூக்கம் வர:
தேங்காய் துருவல், ஊறவைத்த கசகசாவை மைய அரைத்து சாப்பிட்டால் சுகமான தூக்கம் வரும்.