மகாலெட்சுமி சுப்ரமணியன்
சளி, இருமல் போன்ற பாதிப்புகள் அண்டாமல், இந்த குளிர்காலத்தை இதமாக ரசிக்க உதவும் அந்த ரகசியக் குறிப்புகள் இதோ உங்களுக்காக...
கோதுமை உணவை அதிகம் சாப்பிட்டால் உடல் சூடு பாதுகாக்கப்படும்.
ஆலிவ் எண்ணெயை சூடாக்கி உடல் மற்றும் தலையின் மேற்பகுதியில் நன்றாகத் தேய்த்து விட்டு இளம் சூடான நீரில் குளித்தால் உடல் பளபளப்பாகும்.
பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு போன்ற நட்ஸ் தினமும் சாப்பிட்டு வர தோல் ஈரப்பதம் பாதுகாக்கப்பட்டு, புத்துணர்வோடு இருக்கும்.
பன்னீர், கிளிசரின் இரண்டையும் கலந்து தூங்கச் செல்லும் போது கால் விரல், கைகளில் தடவி விட்டு படுக்க, சருமம் வெள்ளை பூக்காமல் மென்மையாக இருக்கும்.
இரவில் தூங்கச் செல்லும் முன் வெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தடவி விட்டு படுக்க உதடு வெடிப்பு ஏற்படாமல் மென்மையாக இருக்கும்.
கொள்ளு ரசம், கொத்தமல்லி சூப் போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள உடல் சூடு பாதுகாக்கப்படும்.
ஊற வைத்த திராட்சை நீரை திராட்சையுடன் சாப்பிட மலச்சிக்கல் இருக்காது.
கடுகு எண்ணெயை உடலில் தடவிக் கொண்டு பின் குளிக்க உடல் சூடு பாதுகாக்கப்படும்.
உல்லன் ஸ்வெட்டர், மஃப்ளர், கம்பளி போர்வைகள் உடல் கதகதப்பை தரும்.
சுக்கு காபி, இஞ்சி தேநீர் போன்றவை உடலை குளிர்ச்சியின்றி கதகதப்பாக வைத்திருக்க உதவும்.