எஸ்.ராஜம்
வசம்பை பொடித்து வைத்துக்கொண்டு, இத்துடன் தேனைக்கலந்து கொடுத்து வந்தால் திக்குவாய் சரியாகும்.
இமை முடி மற்றும் புருவங்கள் அடர்த்தியாக இரவு உறங்கச் செல்லும் முன், சிறிதளவு விளக்கெண்ணையை இமையில் மற்றும் புருவங்களில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தொடர் தும்மல் வந்துகொண்டே இருந்தால், விபூதியை தண்ணீரில் குழைத்து மூக்கின் மேல் பூசினால் தும்மல் வருவது நிற்கும்.
முருங்கை இலையுடன் உப்பு சேர்த்து, அரைத்து, சாறு பிழிந்து, இடுப்பு பிடிப்பு உள்ள இடத்தில் தடவினால், பிடிப்பு உடனே விட்டுவிடும்.
டீ தயாரிக்கும்பொழுது டீத்தூளுடன் ஐந்து அல்லது ஆறு புதினா இலைகளைப் போட்டுக் கொதிக்கவைத்து, குடித்தால் பித்தம் நீங்கும்.
உளுந்து, கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும சமஅளவு எடுத்து, சிறிது வெந்நீர் விட்டு அரைத்து, பற்றுபோட்டால், மூட்டு வலி, மூட்டுவாதம் ஆகியவை குணமடையும்.
வெள்ளரிப்பழ விதைகளை எடுத்து அதன் உள்ளே உள்ள பருப்பை தினமும் சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் கல் இருந்தால் குணமாகும்.
பச்சை வாழைப்பழத்தை மசித்து, பாதங்களில் பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தடவி வந்தால், பித்த வெடிப்பு குணமாகும் பாதங்களும் மிருதுவாக இருக்கும்.
மாம்பழச் சாறுடன் தேன் கலந்து பருகினால், நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்து அரைத்து, வாயில் போட்டு மென்று தின்றால், வாய்ப்புண் குணமாகும்.