எஸ்.ராஜம்
தேனில் ஊற வைத்த பைனாப்பிளை தினசரி சிறு துண்டாக இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
காதில் கம்மல் போடும் இடத்தில் புண் இருந்தால் கடுக்காய், மஞ்சள் அரைத்து பூசி வர விரைவில் புண் ஆறி விடும்.
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பால் பெருங்காயத்தை தூள் ஆக்கி வாணலியில் போட்டு சிறிது சூடுபடுத்தி, சொத்தைப்பல் உள்ள இடத்தில் வைத்தால் புழுக்கள் செத்து, பல்வலி நொடிப் பொழுதில் குணமாகி விடும்.
கருஞ்சீரகத்தை நீரில் ஊற வைத்து அந்நீரால் வாய் கொப்பளித்தால் பல்வலி நீங்கி விடும்.
இலந்தை இலையை நன்கு அரைத்து காயத்தின் மீது போட்டு வர வெட்டுக்காயம் குணமாகும்.
வெள்ளை எள்ளைச் சிறிது பால் விட்டு நைசாக அரைத்து, நெற்றியில் பற்று போட, ஒற்றைத் தலைவலி உடனடியாக நீங்கும்.
வெள்ளைப் பூண்டை உரித்து அதை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிட கக்குவான் இருமல் குணமாகும்.
காயம் ஏற்பட்டு இரத்தப் பெருக்கு நிற்காமல் இருந்தால், கருவேலம் பிசின் தூளைக் காயத்தின் மீது தூவி விட்டால் இரத்த பெருக்கு உடனே நின்று விடும்.
முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும்.
சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்கவும். விரைவில் தழும்புகள் மறையும்.
குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
தினமும் அல்லது வாரம் மூன்று முறையாவது பப்பாளி விதைகளை சாப்பிட்டால், வயிற்றில் பூச்சிக்கள் மற்றும் புழுக்கள் ஏற்படாது. பப்பாளி விதைகளில் உள்ள சத்துக்கள் வயிற்றுப் பூச்சிகளை அழிக்கிறது.
வயிற்றுப்புண், வாய்ப்புண்ணால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 செம்பருத்தி பூவின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.