மகாலெட்சுமி சுப்ரமணியன்
வயிற்று நோய் எதுவானாலும் சீரகத்தை பொடி செய்து மோரில் கலந்து சாப்பிட நல்ல குணம் கிடைக்கும்.
வாய்ப்புண், வயிற்று புண் குணமாக முட்டைகோஸை வேக வைத்து அந்த நீரை குடிக்கலாம்.
வயிற்றுவலிக்கு தண்ணீரில் சிறிது சுக்கு, பனங்கற்கண்டு கொதிக்க வைத்து சாப்பிட வலி சரியாகும்.
ஜாதிக்காயை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட வயிற்று உப்புசம், வயிற்று வலி குணமாகும்.
வயிற்று புண், வாய்ப்புண் குணமாக மணத்தக்காளி கீரை அல்லது அகத்திக்கீரையை மண்டியாகவோ, சாறாகவோ குடித்து வர நல்ல பலன் தரும்.
திராட்சை சாறு வாரம் ஒருமுறை சாப்பிட குடல்புண், வயிற்றுவலி குணமாகும்.
வெற்றிலை, ஓமம் இடித்து பிழிந்து தேன் கலந்து பருக வயிற்று பொருமல், வயிற்று போக்கு குணமாகும்.
குடல் வலிமைக்கு வில்வ பூக்களை புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட்டு வரலாம்.
நாவற்பழம், பிரண்டை துவையல் செய்து சாப்பிட வயிற்று பிரச்னைகள் சரியாகும்.
பச்சை நெல்லிக்காயை பற்களால் கடித்து சாப்பிட பற்களில் உள்ள கறைகள் நீங்கும்.
நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட இருமல், கபக்கட்டு நீங்கும்.
பூண்டு சாற்றில் உப்பு கலந்து சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் தடவ சுளுக்கு மறையும்.
நாள்தோறும் ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர் மோரில் கலந்து குடிக்க இடுப்பு பகுதியில் கொழுப்பு சேராது.
முட்டைக்கோஸை சாறாகவோ, சாலட்டாகவோ சாப்பிட முகச்சுருக்கம், முக வரிகள் மறையும்.
பெண்கள் அடிக்கடி வெள்ளரிக்காயை சாப்பிட்டு வர முகப்பரு நீங்கும். மாதவிலக்கு பிரச்னைகள் சரியாகும்.
தினமும் ஒன்றிரண்டு பாதாம் சாப்பிடுவதை பெண்கள் வழக்கமாக்கிக் கொள்ள செரிமானம், இதய ஆரோக்கியம் மேம்படும். மேனி ஈரப்பதத்துடன் சுருக்கம் இன்றி பளபளப்பாக இருக்கும்.
கிராம்பு, சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை குடித்து வர தலைவலி மட்டுப்படும்.
வெற்றிலை சாற்றில் கற்பூரம் கொஞ்சம் கலந்து தலையில் பற்று போட தலைவலி குறையும்.
கருஞ்சீரகத்தை அரைத்து தேமல் உள்ள இடங்களில் தடவி விட்டு கழுவி வர தேமல் வருவது மட்டுப்படும்.
படிகாரத்தை நீரில் கரைத்து அந்த தண்ணீரில் முகம் கழுவி வர பருக்கள் வந்த தழும்புகள் மறைந்துவிடும்.
அத்திப்பழம் சாப்பிட்டு வர அனைத்து வகையான ஆன்டி ஆக்ஸிடென்ட், வைட்டமின் சி, வைட்டமின் டி, அயர்ன் சக்தி கிடைக்கும்.
அடிக்கடி விக்கல் வந்தால் ஒரு கப் தண்ணீரில் 2, 3 ஏலக்காய்களை தட்டி போட்டு வில்வ இலைகள் 4, 5சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க விக்கல் நிற்கும்.