கே.எஸ்.கிருஷ்ணவேனி
இதில் விட்டமின் பி, சி, கே ஆகிய சத்துக்கள் உள்ளது. கால்சியம், 92% நீர்ச்சத்து, தாதுக்கள் அனைத்தும் நிரம்பியுள்ளது.
இதனை குழம்பு, கூட்டு, பொரியல் என செய்து சாப்பிட உடல் எடை குறைவதுடன் ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.
சுரைக்காயின் தோல் நீக்கி சதைப்பகுதியை ஜூஸாக்கி அத்துடன் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து சிறிது உப்பும் கலந்து பருக சிறுநீரக கோளாறு, நீர்க்கட்டு, நீர் எரிச்சல் ஆகியவை குணமாகும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த காயை உணவில் அடிக்கடி சமைத்து உண்ண ரத்தத்தில் சர்க்கரையின் அளவு நன்கு குறையும்.
இதன் சதைப்பகுதியை அரைத்து நெற்றியில் பற்று போட சூட்டினால் ஏற்படும் தலைவலி குணமாகும்.
இதில் உள்ள நீர்ச்சத்து நம் உடலை முழு சக்தியுடன் செயல்பட உதவுவதுடன் உடல் எடையையும் குறைக்க உதவும்.
இதில் உள்ள பொட்டாசியம் நம் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது. உயர் ரத்த அழுத்தத்தை சீராக்குவதுடன் கொழுப்பையும் குறைக்கக்கூடியது.
இதனுடன் பாசிப்பருப்பு சேர்த்து சுவையான கூட்டு செய்யலாம். பொரியல் செய்யலாம், குழம்பிலும் போடலாம். தோசைக்கு அரைக்கும் போது சுரைக்காய் துண்டுகளையும் சேர்த்து அரைத்து செய்யும் சுரைக்காய் தோசை உடலுக்கு மிகவும் நல்லது.
மலச்சிக்கல், குடலில் புண்கள் (அல்சர்) போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்கள் தினமும் ஒருவேளை சுரைக்காயை உணவில் சேர்த்து வர குடல் புண் ஆறும், மலச்சிக்கல் தீரும். குறிப்பாக மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த உணவாக பயன்படும்.