எஸ்.மாரிமுத்து
நல்ல காற்று ஆயிரம் அவுன்ஸ் மருந்துக்குச் சமானம்.
முகமலர்ச்சி, நிதானமான வாழ்க்கை, அமைதி - இவை உள்ள இடத்தில் வைத்தியத்திற்கு வேலையில்லை.
மக்கள் ஆரோக்கியமாயிருந்தால் வைத்தியர்களுக்கு நோய் வரும்.
இரவில் ஒரு ஆப்பிளை உண்டு வந்தால், பல் வைத்தியருக்கு நம்மிடம் வேலை இல்லை.
சூரியன் போகாத இடத்திற்கு வைத்தியர் போகிறார்.
ஒருவேளை உணவை இழத்தல், நூறு வைத்தியர்களை அழைப்பதை விட மேலானது.
இரவு சாப்பாட்டிற்கு முன்னும் பின்னும் சிறிது உலாவுதல் நலம்.
நன்றாக இருக்கும் உடலிலேயே நல்ல மனம் தங்கி இருக்கும்.
ஐந்துக்கு எழுந்திரு, ஒன்பதுக்கு உணவருந்து, ஐந்துக்கு சாப்பிடு, ஒன்பதுக்கு உறங்கு.
உணவு, அமைதி, முகமலர்ச்சி ஆகிய மூன்றுமே உலகில் தலை சிறந்த மருத்துவர்கள்.
ஒருவன் உடல் நலம் குறைவு என்றால் எல்லாமும் குறைவு என்று பொருள்.
தாகத்தோடு படுக்க செல்பவன் உடல் நலத்தோடு விழித்து எழுவான்.
நல்ல மனைவியும் உடல் நலமும் மனிதனின் சிறந்த செல்வம்.
முன்னிரவில் தூங்கி, பின் இரவில் எழுந்திருப்பவனுக்கு உடல் நலமும் செல்வமும் அறிவும் பெருகும்.
குளிர்ச்சியான தலையும் சூடான பாதங்களும் நீண்ட வாழ்வுக்கு உகந்தவை.
செல்வம் இல்லாமல் ஆரோக்கியம் மட்டும் இருந்தால், அதுவே பாதி நோயாகும்.
உடல் நலமாய் இருக்கும் பொழுதே நோயைப் பற்றி ஆராய்ந்து தெரிந்து கொள்.