சி.ஆர்.ஹரிஹரன்
பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்துப் பாலில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி, கைகால் தளர்ச்சி போன்றவை சரியாகி விடும்.
ஜாதிக்காய், சுக்கு இரண்டையும் சம அளவு எடுத்து சிறிதளவு சீரகம் சேர்த்து மாவாக அரைத்துக் காலை, மாலை ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு வர அஜீரணக்கோளாறு, பித்த ஏப்பம் ஆகியவை சரியாகும்.
செம்பருத்திப் பூவை அரைத்து,அதனுடன், தேங்காய் எண்ணெய் கலந்து, தலையில் அழுந்தத் தேய்த்து நன்கு ஊறவிட்டு அலசினால் முடி கொட்டுவது நின்று விடும்.
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு, நன்கு கொதிக்க வைத்துப் பருகினால் நீர்க்கடுப்பு உடனே குணமாகி விடும்.
சின்ன வெங்காயத்தை உரித்து நெய் விட்டு வதக்கி, இரவு நேரங்களில் சாப்பிட்டு வந்தால் நிம்மதியான உறக்கம் கிடைக்கும்.
சப்போட்டா பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட புண்கள், குடல் புண் போன்ற உபாதைகள் விலகும்.
துளசி இலையுடன் சிறிது புதினா சேர்த்துக் கொதிக்க வைத்து சூடு ஆறியதும், அத்துடன் தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்று உபாதைகள் அகலும்.
ஒரு டம்ளர் எலுமிச்சை பழச் சாறுடன், இரண்டு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வர வறட்டு இருமல் குணமாகி விடும்.
வெங்காயச் சாற்றுடன் கடுகு எண்ணெய் கலந்து மூட்டுவலி உள்ள இடங்களில் தடவினால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.