சி.ஆர்.ஹரிஹரன்
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை வைத்தே நாம் எதிர்கொள்ளும் வியாதிக்கு தீர்வு கிடைக்க வழி செய்யலாம். இதோ அதற்கான குறிப்புகள்.
20 கிராம் வெள்ளை வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, நெய்யில் வதக்கி, பனங்கற்கண்டு சேர்த்து தினமும் சாப்பிட்டு வர ரத்தமூலம் நீங்கும்.
சர்க்கரை வியாதி உள்ளவர்கள், உணவில் அடிக்கடி கோவைக்காயை சேர்த்து வந்தால் சர்க்கரை வியாதி கட்டுக்குள் இருக்கும்.
வெங்காயச்சாற்றில் மஞ்சள் பொடியைக் குழைத்து தடவினால் அடிபட்ட காயம் விரைவில் ஆறும்.
ஆறாத புண்களுக்கு விராலி மஞ்சளைச் சுட்டு சாம்பலை, தேங்காய் எண்ணையில் குழைத்துத் தடவ, விரைவில் குணமாகும்.
வேப்ப எண்ணெயை மஞ்சள் சேர்த்துக் குழைத்து பித்த வெடிப்பு மீது தடவி வர விரைவில் குணமாகும்.
பாகற்காயின் தளிர் இலைகளை சாப்பிட்டு வந்தால் இருமல், வயிற்றுப்போக்கு, நீரிழிவு போன்றவை சரியாகும்.
வெந்தயத்தை ஊற வைத்து, அதனுடன் மருதாணி, கற்றாழை சேர்த்து அரைத்து தலையில் தடவினால் பூச்சி வெட்டு குறையும்.
மஞ்சள், நெல்லி வேப்பிலையை பொடியாக்கி தினம் இருவேளை நீரில் கலந்து சாப்பிட்டு வர இளநரை மறையும்.
வாய் திக்குபவர்கள் வில்வ இலை யைப் பொடியாக்கி தினமும் காலையில் மென்று தின்று வரவும்.
தலைசுற்றல், தலைவலிக்கு இஞ்சியுடன், வெங்காயத்தை அரைத்து பற்றுப் போட்டால் சரியாகிவிடும்.
கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியைப் போட்டு 12 மணி நேரம் ஊற வைத்துக் குடித்து வர ரத்தக் கொதிப்பு கட்டுக்குள் இருக்கும்.
பச்சை கறிவேப்பிலையை அரைத்து மோருடன் கலந்து சாப்பிட்டு வர வாய்ப்புண், வயிற்றுப் புண் ஆறிவிடும்.