நல்ல ஆரோக்கியத்திற்கு சில எளிய குறிப்புகள்!

ஆர்.ஜெயலட்சுமி

நுங்குகளை சின்னத் துண்டுகளாக வெட்டி நன்கு காய்ச்சி ஆற வைத்த பாலில் போட்டு சர்க்கரை ஏல பொடி சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். 

Ice apple

இரண்டு வெள்ளரிப்பிஞ்சுகளை நறுக்கி நான்கு கப் மோர், தேவையான அளவு உப்பு, இரண்டு ஸ்பூன் கொத்தமல்லி இலையை  மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் ஓமம் தாளித்து டம்ளரில் விட்டு வெள்ளரிக்காய் ஸ்லைசை மேலே வைத்து பரிமாறினால் வெயில் காலத்திற்கு சுவையான சூப்பாக இருக்கும். .

Vellaripinju

தர்பூசணி பழ துண்டுகளை பதநீரில் போட்டு ஒரு துண்டு ஐஸ்கட்டி சேர்த்து சாப்பிட உடல் சூடு தணியும். 

Watermelon

இரண்டு மூன்று வகை பழங்கள் இருந்தால் எல்லாவற்றையும் துண்டுகளாக்கி  சர்க்கரை சிறிது மில்க்மெய்டு போட்டு கலக்கி ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Fruits

நாக்கு வறட்சியாக இருந்தால் பார்லி கஞ்சியை வைத்து அந்த கஞ்சியுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வர நாக்கின் வறட்சி நீங்கும்.

Barlie kanji

வெயில் காலங்களில் உணவில் நிறைய மோர் மற்றும் தயிர் சேர்த்துக்கொண்டால் குளிர்ச்சியும் ஜீரணம் எளிதில் ஆகும்.

Curd

 உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்று வலிக்கு ஒரு எலுமிச்சை பழத்தின் சாறு பிழிந்து இளநீரில் கலந்து கொடுத்தால் வயிற்று வலி கப்பென்று நின்று விடும். 

Coconut water

கோடைகாலத்தில் சூட்டை தணிப்பதற்கு அடிக்கடி அல்லது தினசரி சாலட் வகைகளை சாப்பிடுங்கள். கேரட் வெள்ளரி வெண்டை தக்காளி பெரிய வெங்காயம் கருவேப்பிலை கொத்தமல்லியுடன் மிளகு உப்பு சேர்த்து சாலட்  செய்வது ஆரோக்கியமானது. 

Salad

நான்கு பெரிய நெல்லிக்காயை குக்கரில் வேகவைத்து கொட்டை நீக்கி மசித்து கெட்டி தயிரில் கலந்து பெருங்காயம் கடுகு பச்சை மிளகாய் போட்டு தாளித்து சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும். 

Gooseberry

குளிக்கும் நீரில் ஓர் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சிறிது உப்பையும் கலந்து குளித்து வந்தால் வியர்வை நாற்றம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்

Bath

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் தூதுவளை பழங்களை வாங்கி அதில் குண்டு ஊசியால் துளைகள் போட்டு தேனில் ஊற விட வேண்டும் தினம் இரண்டு பழங்களை அதிலிருந்து சாப்பிட்டால் கோடையில் ஜில்லென்று எது குடித்தாலும் ஜலதோஷம் வராது..

Thuthuvalai fruit
Cooking tips
காய்கறிகளை வறுவல் செய்யும்போது இதை செய்யுங்கள்! - சமையல் குறிப்புகள் சில!