ஆர்.கீதா
நான்கு சின்ன வெங்காயத்தை நன்றாக மென்று சாப்பிட்டு விட்டு ஒரு டம்ளர் வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் நீங்கி விடும்.
வாரம் இரண்டு அல்லது மூன்று முறை கத்திரிக்காய் உணவுகள் சாப்பிடுவது உடல் எடையைக் குறைக்க உதவும்.
சுக்கை அரைத்து நெற்றியில் பற்றிட தலைவலி குறையும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பீட்டா கரோட்டின், வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து போன்றவை உள்ளதினால் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவும்.
கால்கிலோ இஞ்சியை நறுக்கி, இரண்டு லிட்டர் நீர் சேர்த்து நன்றாக ஊறவைத்து, வெல்லம் சேர்த்து, சிறுதீயில் கொதிக்க வைத்து பாகு பதத்தில் இறக்கி வைக்கவும். இதைத் தினமும் அரை டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் சுவையின்மை, பசியின்மை விலகும்.
சின்ன வெங்காயம் நான்கை எடுத்து நசுக்கி சாறு எடுத்து, மிதமாக சூடு செய்து இரண்டு காதுகளிலும், இரண்டு சொட்டு விட்டால் காது வலி நீங்கி விடும்.
இஞ்சிச்சாறுடன் சிறிது ஜீரகம், சிறிது மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டால் புளித்த ஏப்பம் நிற்கும். சாப்பிடும் உணவு நன்கு ஜீரணமாகும்.
தலை சுற்றல், தலைவலிக்கு இஞ்சியுடன், வெங்காயத்தை அரைத்து பற்று போட்டால் நீர் கோர்த்துக் கொண்டது குறையும். காய்ச்சல், ஜலதோஷம் சரியாகும்.
எண்ணெய்க் குளியலுக்குப் பிறகு இஞ்சிச்சாறு அருந்துதல் நல்லது. உணவுப்பாதைகள் சுத்தமாகி பசி எடுக்கும்.
இஞ்சிச்சட்னி செய்து மாதத்தில் இரண்டு முறையாவது சாப்பிட்டு வர செரிமானக் கோளாறுகள் விலகும்.