வீட்டுலேயே இருக்குது உங்க நோய்க்கான தீர்வு!

சி.ஆர்.ஹரிஹரன்

இருமல், கபம் போன்றவற்றால் மூச்சுத்திணறும் குழந்தைகளுக்கு இஞ்சிச்சாறு, மாதுள பழச்சாறு  கலவையுடன் தேன் கலந்து குடிக்கக் கொடுத்தால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

Cough

வெங்காயத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, சிறிதளவு பனங்கற்கண்டை  சேர்த்து வதக்கி, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி விலகும்.

Nerve disorder

சுக்கை அரைத்து நெற்றியில் பற்றிட தலைவலி குணமாகும்.

Headache

மணத்தக்காளிக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். ரத்த அழுத்தத்தை  கட்டுக்குள் வைக்கலாம்.

Blood pressure

நீரிழிவு, இதயநோய், இரத்த அழுத்தம் உள்ளவர்கள், சமையலில் அதிக அளவில் தேங்காயை, பயன்படுத்துவதை  தவிர்த்து விடுங்கள்.

Heart pain

தொண்டை கட்டிக்கொண்டால் கற்பூரவல்லிச் சாற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்துப் பருகினால் சரியாகிவிடும்.

Sore throat

உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்று வலிக்கு, ஒரு எலுமிச்சைப் பழத்தின் சாறைப் பிழிந்து இளநீரில் கலந்துகுடித்தால் வயிற்று வலி காணாமல் போய்விடும்.

Stomach pain

செம்பரத்தி  இலை, பூ ஆகியவற்றை சேர்த்து அரைத்து தீப்பட்ட புண்ணின் மீது பூசி வந்தால் எரிச்சல் குறைந்துவிடும்.

Burning Wound

வெந்தயம், சீரகம் இரண்டையும் பொடி செய்து வைத்துக்கொண்டு இரவு நேரத்தில் 100 மி. லி. தண்ணீரில் போட்டு மூடி வைத்து, அதிகாலை அந்தத்தண்ணீரைக் கலக்கி குடித்து வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.

Diabetes

இருமல் தொந்தரவா? பசும்பாலில் மஞ்சள் பொடியையும், மிளகுப்பொடியையும் போட்டுக்காய்ச்சி, நன்றாக கொதி வந்ததும், பனங்கற்கண்டு சேர்த்துக்குடித்தால் இரண்டு, மூன்று நாட்களிலேயே இருமல் சரியாகிவிடும்.

Cough

குப்பைமேனி இலையோடு மஞ்சள், கல்உப்பு சேர்த்து தோலில் அரிப்பு, அலர்ஜி, சிரங்கு உள்ள இடங்களில் தடவி வந்தால் விரைவில் குணம் பெறலாம்.

Psoriasis

முருங்கை இலைக்காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதை இடிக்கவும்.  இஞ்சி, மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை இடித்து அதனுடன் சேர்க்கவும். இதில் தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து கொதிக்க விட்டு பாதியாக்கி, வடிகட்டி சூப் போல குடித்து வந்தால் உடல்வலி பறந்து விடும்.

Body pain
Spider
சிலந்திகள் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!