நான்சி மலர்
நீச்சல் (Swimming) பயிற்சி செய்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு சிறந்த பயிற்சியாகும். நீச்சல் செய்வதால் கிடைக்கும் முக்கியமான 10 நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
நீச்சல் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபடுபவர்களுக்கு மற்றவர்களை விட நீண்ட ஆயுளும், இளமையான தோற்றமும் கிடைப்பதாக ஆய்வுகள் சொல்கிறது.
தினமும் நீச்சல் செய்வது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், உயர் ரத்த அழுத்தத்தைச் சீராக வைக்கவும் உதவுகிறது.
நீச்சல் ஒரு சிறந்த ஏரோபிக் பயிற்சி. இது நம் உடலை ஆரோக்கியமாக சோர்வடையச் செய்து, இரவில் ஆழ்ந்த தூக்கம் வர உதவுகிறது.
நீச்சல் பயிற்சியில் தண்ணீரின் எதிர்ப்பு விசைக்கு எதிராக இயங்குவதால், தசைகள் தேவையற்ற கொழுப்புகள் நீங்கி நல்ல வடிவம் பெற உதவுகிறது.
நீச்சல் செய்வது மன அழுத்தத்தைக் குறைத்து, மனநிலையை மேம்படுத்த உதவுகிறது.
நீச்சல் குளத்தில் உள்ள ஈரப்பதம் நுரையீரலுக்கு நல்லது. இது சுவாசத் திறனை மேம்படுத்தி, மூச்சை அடக்கும் திறனை வளர்க்க உதவுகிறது.
மூட்டு வலி அல்லது ஆர்த்தரைடிஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த பயிற்சி.
ஒரு மணி நேரம் நீச்சல் அடிப்பது அதிகப்படியான கலோரிகளை எரிக்க உதவும்.
நீச்சல் இதயத் துடிப்பை சீராக்கி ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
நீச்சல் அடிக்கும்போது தலை முதல் கால் வரை அனைத்து தசைகளும் பயன்படுத்தப்படுகின்றன. இது உடலுக்கு முழு உடற்பயிற்சி செய்த பலனைத் தரும்.