பெண்களுக்கு இந்த காய்கறிகள் ரொம்பவே முக்கியம்!

கல்கி

நமது அன்றாட வாழ்வில் காய்கறிகள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. ஒவ்வொரு காய்கறியும் நமக்கு வெவ்வேறு பலன்களை அள்ளித்தருகிறது. அவ்வகையில், பெண்களுக்கான மாதவிடாய் பிரச்னைகளை குணப்படுத்தப் பயன்படும் சில காய்கறிகளை இப்போது காண்போம்.

Vegetables | Imge credit: pinterest

கொத்தவரை: மாதவிடாயின்போது பெண்களுக்கு அதிகப்படியான வயிற்றுவலி இருக்கும். பெண்கள் தொடர்ந்து கொத்தவரைக் காயைச் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் வலி ஓரளவு குறையத் தொடங்கும்.

Kothavarai | Imge credit: pinterest

எலுமிச்சை: இன்றைய காலகட்டத்தில் சில பெண்களுக்கு மாதவிடாய் மாதந்தோறும் சரியாக வருவதில்லை. இதனால், குழந்தை பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்பெண்கள் தொடர்ந்து எலுமிச்சையை எடுத்துக்கொண்டால் தடைபட்ட மாதவிடாய் சீராகும்.

Lemon | Imge credit: pinterest

கோவைக்காய்: வெள்ளைப்படுதல் உள்ள பெண்கள் அதிகளவில் கோவைக்காயை உண்பதன் மூலம் வெள்ளைப்படுதலுக்குத் தீர்வு காண முடியும்.

Kovakai | Imge credit: pinterest

வாழைக்காய்: மாதவிடாயின்போது சிலருக்கு அதிக இரத்தப்போக்கு இருக்கும். இதனைத் தவிர்த்திட தொடர்ந்து வாழைக்காயை சாப்பிட்டு வரலாம்.

Raw Banana | Imge credit: pinterest

வெண்டைக்காய்: இரத்தம் கட்டியாக வந்தால் அதனை நீர்த்துப் போகச் செய்ய வெண்டைக்காய் உதவுகிறது. இது உடலுக்கு குளிர்ச்சியையும் அளிக்கிறது.

Vendakai | Imge credit: pinterest

வெண்பூசணி: மாதவிடாய் சுழற்சியில் சில பெண்களுக்கு முன்னதாகவே மாதவிடாய் வந்துவிடும். இதனை சரி செய்ய வெண்பூசணி உதவுகிறது.

Venpoosani

பீர்க்கங்காய்: மாதவிடாய் வந்து பிறகு 7 முதல் 8  நாட்களுக்கு இரத்தப்போக்கு இருக்கும். அதையும் தாண்டி இரத்தப்போக்கு இருந்தால் இதனை சரி செய்ய பீர்க்கங்காய் உதவுகிறது.

Peerkangai | Imge credit: pinterest

கத்திரிக்காய்: கர்ப்பப்பையில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் தாயாகும் வாய்ப்பு குறைவாக இருக்கும். இந்த மலட்டுப் பிரச்சினையை சரிசெய்து பெண்ணைத் தாயாக்க கத்திரிக்காய் உதவுகிறது.

Brinjal | Imge credit: pinterest

தேங்காய்: பலமின்றி இருக்கும் பெண்களின் கர்ப்பப்பைக்கு பலமூட்டி, கர்ப்பகிரஹமாக மாற்றிட தேங்காயை தொட்ர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

Coconut | Imge credit: pinterest

புடலங்காய்: தாய்மை அடைந்தபிறகு, சில பெண்களுக்கு சிறிது காலத்திற்கு பிறகு தாய்ப்பால் சுரப்பது நின்றுவிடும். இவர்கள் இப்பிரச்சினையைத் தீர்க்க பல வைத்தியங்களை முயற்சி செய்வதுண்டு. புடலங்காயைத் தொடர்ந்து சாப்பிடுவது இதற்கு சிறந்த தீர்வாக அமைகிறது.

Pudalangai | Imge credit: pinterest

முருங்கைக்காய்: மாதவிடாய் வந்த பிறகும் சிலருக்கு சரியான இரத்தப்போக்கு இன்றி தாமதமாகும். இவர்கள் முருங்கைக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாமதமான இரத்தப்போக்கு விரைவில் சீராகும்.

Murungakai | Imge credit: pinterest

பெண்கள் தொடர்ந்து காய்கறிகளை அதிகளவில் எடுத்துக்கொள்வதுதான் மேற்கண்ட பல பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும்.

Vegetables | Imge credit: pinterest
Medicinal Tips | Imge Credit: Pinterest