குழந்தை பெற்ற பின் எடையை குறைக்க ஆலியா பட் செய்யும் விஷயங்கள்!

கிரி கணபதி

பாலிவுட் நடிகை ஆலியா பட் குழந்தை பிறந்த பிறகு உடல் எடையை குறைத்த விதம் பலருக்கும் ஆச்சரியம் அளிக்கிறது. அவர் பின்பற்றிய சில விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

ஆலியா பட்டின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ஃபிட்னஸ் பயிற்சியாளர் அவர் 12 வாரங்களில் செய்த உடற்பயிற்சிகள் குறித்த வீடியோவை வெளியிட்டார். இது இணையத்தில் வைரலாக பரவியது.

தொங்கும் நிலையில் கால்களை உயர்த்தி செய்யும் பயிற்சி (Hanging Leg Raises) இடுப்பு மற்றும் அடிவயிற்று பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்க உதவுகிறது.

ஜிம்னாஸ்டிக் வளையத்தில் செய்யும் டிப் பயிற்சி (Gymnastic Ring Dip) மார்பு, தோள்பட்டை மற்றும் கையின் பின்புற தசைகளுக்கு (Triceps) வலிமை சேர்க்கிறது.

புஷ் அப்ஸ் பயிற்சி மேல் உடல் மற்றும் முதுகு பகுதிக்கு வலிமையை அளிக்கிறது. இது நீண்ட நேரம் சுறுசுறுப்பாக செயல்பட உதவுகிறது.

புல் அப்ஸ் பயிற்சி மேல் உடலுக்கு வலிமை தரக்கூடிய முக்கியமான உடற்பயிற்சி. இது முதுகின் பக்கவாட்டு தசைகள் மற்றும் பைசெப்ஸை வலுப்பெற செய்கிறது.

ரன்னிங் பயிற்சி சிலருக்கு கடினமாகவும், சிலருக்கு எளிதாகவும் இருக்கலாம். ஆனால் ஆலியா பட் தனது உடற்பயிற்சி routine-ல் ரன்னிங்கை தவறாமல் செய்திருக்கிறார்.

பார்பெல் ஸ்குவாட்ஸ் கீழ் உடலுக்கு வலிமை கொடுக்கும் சிறந்த பயிற்சி. இது உடலின் அனைத்து தசைகளையும் செயல்பட வைக்கிறது.

ஆலியா பட் குழந்தை பிறந்த பிறகு உடல் எடையை குறைக்க புரதம் அதிகம் உள்ள உணவுகளை தனது டயட்டில் சேர்த்துக்கொண்டார்.

ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்பினாலும், அவர் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே தேர்ந்தெடுத்தாராம்.

பெரும்பாலும் வீட்டில் சமைத்த உணவுகளையே ஆலியா சாப்பிட்டார். உடல் எடை கூடாமல் இருக்க எண்ணெய் பலகாரங்களையும் தவிர்த்தார்.

தனது உடலுக்கு எந்த மாதிரியான உணவுகளும், உடற்பயிற்சிகளும் ஒத்துப்போகும் என்று கேட்டறிந்த பிறகே, அவர் தனது எடை குறைக்கும் பயணத்தை தொடங்கினார்.

குழந்தை பெற்ற பிறகு உடல் எடையை குறைக்க ஆலியா பட் சரியான டயட் மற்றும் முறையான உடற்பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டார்.

வடாம், வற்றல் போடலாம் வாங்க...