கிருமிகளைச் சுருட்டி வீசும் இந்த ஒரு உலோகம்!

நான்சி மலர்

வெள்ளிப் பாத்திரங்களில் (Silver vessels) உணவு உண்பது அல்லது தண்ணீர் குடிப்பது தமிழர்களின் பாரம்பரியத்தில் ஆரோக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. அதன் முக்கிய 10 நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

Silver vessel | Credits: Pinterest

ஆயுர்வேதத்தின்படி, வெள்ளி உடலில் உள்ள 'பித்தம்' மற்றும் 'வாதம்' ஆகியவற்றைச் சமநிலையில் வைக்க உதவுகிறது.

Pitham

மற்ற உலோகங்களைப் போல வெள்ளி உணவோடு வினைபுரியாது. இது முற்றிலும் நச்சுத்தன்மையற்றது என்பதால் எந்தவிதமான ஒவ்வாமையும் (Allergy) ஏற்படாது.

No allergy

தொடர்ந்து வெள்ளிப் பாத்திரத்தைப் பயன்படுத்துவது சருமத்தின் பொலிவை கூட்டி, இளமையைத் தக்கவைக்க உதவும்.

Skin glow

குழந்தைகளுக்கு வெள்ளித் தட்டில் உணவு வழங்குவது அவர்களின் ஞாபக சக்தியை அதிகரிக்கவும், மூளை வளர்ச்சியைத் தூண்டவும் உதவும் என்று நம்பப்படுகிறது.

Children brain development

முற்காலத்தில் பால் மற்றும் உணவுகள் சீக்கிரம் கெட்டுப்போகாமல் இருக்க வெள்ளி நாணயங்களை அதில் போடுவார்கள். வெள்ளி பாத்திரத்தில் வைக்கும் உணவு நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

Milk

உடலில் உள்ள தேவையற்ற நச்சுகளை வெளியேற்ற வெள்ளி உதவுகிறது. இது ரத்தத்தைச் சுத்திகரிக்கவும் துணைபுரிகிறது.

Body detox

வெள்ளிப் பாத்திரத்தில் உள்ள தாதுக்கள் உணவோடு சேர்ந்து வயிற்றுக்குள் செல்லும்போது, அது செரிமான மண்டலத்தை சீராக்க உதவுகிறது.

Good digestion

வெள்ளி ஒரு குளிர்ச்சியான உலோகம். இதில் தண்ணீர் குடிப்பது அல்லது சாப்பிடுவது உடல் சூட்டைத் தணித்து உடலைக் குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது.

body heat

வெள்ளி பாத்திரங்கள் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டவை. இதனால் உணவில் உள்ள கிருமிகள் நீக்கப்பட்டு, உணவு சுத்தமாக இருக்கும்.

bacteria

வெள்ளி (Silver) அதன் தனித்துவமான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுக்காக பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

immune power
Ear Piercing
காது குத்துவதற்கு முன் நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!