மனித உடல்: கற்பனைக்கும் எட்டாத 10 விசித்திர உண்மைகள்!

நான்சி மலர்

நமது உடல் ஒரு அற்புதமான இயந்திரம். மனித உடலைப் பற்றிய டாப் 10 வியப்பூட்டும் தகவல்கள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

Human body

ஒரு மனித உடலில் உள்ள அனைத்து ரத்த நாளங்களையும் (Blood Vessels) எடுத்து ஒன்றோடு ஒன்று இணைத்தால், அது சுமார் 96,000 கிலோ மீட்டர் நீளம் இருக்கும்.

Blood vessel

நமது வயிற்றில் சுரக்கும் செரிமான அமிலம் (Stomach Acid/HCL) மிகவும் வீரியமிக்கது. இது ஒரு சிறிய பிளேடு அல்லது இரும்பைக் கூடக் கரைக்கும் திறன் கொண்டது.

Stomach acid

மனிதக் கண்கள் டிஜிட்டல் கேமராக்களுடன் ஒப்பிடப்பட்டால், அதன் மெகாபிக்சல் அளவு சுமார் 576 மெகாபிக்சல் ஆகும்.

Human eye

நமது மூளை விழித்திருக்கும் போது உருவாக்கும் மின்சாரத்தைக் கொண்டு ஒரு சிறிய LED பல்பை எரிய வைக்க முடியும்.

Brain power

கைரேகையைப் போலவே, ஒவ்வொரு மனிதனுக்கும் நாக்கு ரேகையும் (Tongue Print) தனித்துவமானது.

Palm

உடலில் உள்ள மொத்த செல்களின் எண்ணிக்கையை விட, நம் உடலில் வாழும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகம்.

Human cell

இரவு தூங்கி எழுந்து காலை வேளையில் அளந்து பார்த்தால், நாம் இரவை விட சுமார் 1 சென்டிமீட்டர் உயரமாக இருப்போம்.

Height

உடலின் மொத்த எடையில் மூளை வெறும் 2% தான். ஆனால், உடல் சுவாசிக்கும் ஆக்சிஜனில் 20% பங்கை மூளை ஒன்றே எடுத்துக் கொள்கிறது.

Oxygen

மனித உடலில் ரத்த ஓட்டம் இல்லாத ஒரே பகுதி கண்ணின் கருவிழி (Cornea) ஆகும்.

Cornea

புவிஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் தங்கியிருக்கும் விண்வெளி வீரர்களின் உயரம் சுமார் 2 அங்குலம் வரை அதிகரிக்கும்.

Astronauts height
10 healthy pickles
நாக்கு செத்துப்போச்சா? சப்புக் கொட்டிச் சாப்பிட 10 ஊறுகாய் வகைகள்!