பக்கவிளைவுகள் இல்லாத வைத்தியம்! கூகுளில் தேடாதீங்க! உங்க பாட்டியிடம் கேளுங்க!

ஆர்.ஜெயலட்சுமி

பாட்டி வைத்தியம் என்பது நம் முன்னோர்கள் வழிவழியாகக் கற்றுக்கொடுத்த ஒரு பொக்கிஷம். சில முக்கியமான மற்றும் எளிமையான பாட்டி வைத்திய குறிப்புகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

Paati vaithiyam | Credits: AI Image

மருதாணி இடும்பொழுது சளி பிடிக்காமல் இருக்க: மருதாணியுடன் நொச்சி இலையும் அரைத்து விட்டால் சளி பிடிக்காது. 

Henna

உடல் ஆரோக்கியம் பெற: கேழ்வரகு மாவு, எள்ளு சிறிது, வெல்லம் சேர்த்து இடித்து அதை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் பெறலாம்.

Finger millet flour

மூட்டு வலி குணமாக: கோதுமையை பொன்னிறமாக வறுத்து திரித்து, சலித்து தேன் கலந்து சாப்பிட்டு வர மூட்டு வலி குணமாகும்.

Knee pain

உடல் புத்துணர்ச்சி பெற: துளசி இலைகளை செம்பு பாத்திரத்தில் இரவு ஊற வத்து காலையில் அந்த நீரை பருகினால் உடல் புத்துணர்ச்சி பெரும். 

Tulasi

ஆயுளைக் கூட்ட: உணவின் ஒவ்வொரு கவனத்தையும் ருசித்து ரசித்து உணர்ந்து உண்ண வேண்டும். அது ஆயுளைக் கூட்டும்; உற்சாகம் தரும். 

Food eating

வயிற்று உப்புசம் நீங்க: சாதம் வடிக்கும் நீரில் சிறிது மஞ்சள் தூளையும், சிறிது பனங்கற்கண்டும் சேர்த்து சூட்டோடு சாப்பிட்டு வர குணம் கிடைக்கும்.

Bloating

வாயுத்தொல்லை நீங்க: வெள்ளைப் பூண்டை பசும்பாலில் வேகவைத்து சாப்பிட்டு வர வேண்டும்.

Farting problem

தும்மலும் சளியும் உடனே குறைய: பசும் பாலில் சிறிது ஓமத்தை போட்டு காய்ச்சி சாப்பிட்டு வந்தால் தும்மலும் சளியும் உடனே குறையும். 

Sneezing

வெள்ளைப்படுதல் குணமாக: மாதுளம் பழம் விதைகளை அரைத்து பசுவின் பால் விட்டு கலந்து குடிக்க நீர்க்கடுப்பு நீங்கும், வெள்ளைப்படுதல் குணமாகும். 

Menstrual problem

சொரி, சிரங்கு நீங்க: வெந்நீரில் வேப்பமர இலையைப் போட்டு குளித்தால் சொரி, சிரங்கு, அலர்ஜி போன்றவற்றை நீக்கிவிடும். 

Scabies

செரிமானத்துக்கு: ரசம் வைக்கிற பொழுது அது கொதித்து வருகிற நிலையில் ஒரு கைப்பிடி கொத்தமல்லியை போட்டு அரை மணி நேரம் மூடி வைத்த பிறகு சாப்பிட வேண்டும். இது செரிமானத்துக்கு உதவும்.

Digestion
Traditional home remedies
டாக்டருக்கே சவால் விடும் பாட்டி வைத்தியம்!