மகாலெட்சுமி சுப்ரமணியன்
1/10. கோடைக்காலத்தில் கிடைக்கும் நுங்கு நம் உடலுக்கு குளிர்ச்சி தருவது. எங்கும் எளிமையாக கிடைக்கும். சுவையாக இருக்கும். பலவித மருத்துவ பண்புகளையும் கொண்டுள்ளது.
2/10. நுங்கில் வைட்டமின் சி, பி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம் தயாமின், அஸ்பாரிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற பல்வேறு சத்துகள் அடங்கியுள்ளன.
3/10. கோடைக்கால வெயிலின் தாக்கத்ல் உடல் சோர்வடைவதை தடுக்கிறது. உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
4/10. கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது.
5/10. வயிற்று போக்கு, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளுக்கு நல்ல தீர்வைத் தருகிறது.
6/10. ரத்த சோகையை போக்கி உடல் சுறுசுறுப்பை மேம்படுத்துகிறது.
7/10. நுங்கில் உள்ள ஆந்த்யூசைன் என்ற ரசாயனப்பொருள் பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது.
8/10. இளநீர், நுங்கை அடிக்கடி சேர்த்துக் கொள்ள உடல் பொலிவடைவதோடு சொரி, சரங்கு போன்ற சரும பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க வல்லது.
9/10. வியர்க்குரு,வேனல் கட்டி ஏற்பட்டால் நுங்கை அதில் உள்ள நீரோடு அரைத்து சந்தனம் கலந்து பூசி வர, நல்ல குணம் கிடைக்கும்.
10/10. களைப்பைபோக்கி புத்துணர்வு பெற நுங்கு சர்பத், நுங்கு கீர் சாப்பிடலாம். உடல் எரிச்சலை போக்கி கண் சிவத்தலை சரிசெய்கிறது.